ஞாயிறு, 8 மார்ச், 2015

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.வாங்க வாழ்ந்து காட்டலாம்..

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014Advertisementமரியாதைக்குரியவர்களே,வணக்கம். ஜெ.ஜெ வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்........

29 செப்
2014
05:23
பதிவு செய்த நாள்
செப் 28,2014 00:24

 
                      பெங்களூரு: பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற, 11 மாதங்களில், பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார், நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, ஜான் மைக்கேல் டி குன்ஹா, 2013 அக்டோபரில் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின், வழக்கின் வேகம் சூடுபிடித்தது. கடந்த, 11 மாதமாக, இடைவிடாமல் வழக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பை அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில், வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், அடிக்கடி மனு போட்டதால், இவர் எரிச்சலடைந்தார். அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு இரு நாள் சம்பளம் அபராதமாக விதித்தார். சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, தினமும் பல மணி நேரம் பணியாற்றினார்.வழக்கு விசாரணை முக்கியம் என்பதால், நீதிமன்றத்தில் வழக்கமாக பணி செய்யும் டைப்பிஸ்டை கூட மாற்றி, தனக்கு நம்பகமானவரை, டைப்பிஸ்டாக வைத்து கொண்டார். கடைசியாக அவரே தீர்ப்பை, 'டைப்' செய்ததாக தெரிகிறது.

இவர், பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், பெங்களூரு மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மற்றும் மூன்று பேருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, ஐந்தாவது நீதிபதி இவர்.தீர்ப்பு நாள் நெருங்க நெருங்க, கோரமங்களாவில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் சொந்த ஊர் மங்களூரு. 1985ல் வழக்கறிஞராக பணியை துவக்கிய இவர், 2002ல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சிறப்பு நீதிபதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முன், தார்வாட், பெல்லாரி மற்றும் பெங்களூருவில், உயர் நீதிமன்ற (விஜிலென்ஸ் பிரிவு) பதிவாளர் உட்பட, பல நிலைகளில் பணியாற்றி உள்ளார்.அபத்தமான செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற பெயர் கொண்ட குன்ஹா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்கும்போது, அரசு தரப்பினரிடம் மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், பலமுறை கடுமையாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து செய்த பாவம்?

மரியாதைக்குரியவர்களே,
             
                           வணக்கம். பேருந்து!


              
                   ( ஏதுமறியா அப்பாவிப் பேருந்துகளுக்கு சேதம் விளைவிக்கும் அறிவாளிகளே சிந்தியுங்க! நீங்க பேருந்துகளிலேயே பயணிக்க மாட்டீர்கள் உங்க உறவு மற்றும் குடும்பம் பேருந்துகளில் ஏறவே ஏறாது அப்படித்தானே?)
அவசியம் அரசியல்வாதிகளும்,சமூக நல அமைப்புகளும்,தன்னார்வலர்களும்,இளைய சமூகமும் ,அரசுத்துறைகளும்,எந்த நிகழ்வுகளுக்கும் பேருந்துகளுக்கு சேதப்படுத்துவதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.சிந்தனை செய்து ,உரியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் உரிய தண்டனை வழங்கவும் நிர்ப்பந்திக்க வேண்டும்.,மக்களுக்கு துரோகம் செய்வதாக விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.
                    ஆமாங்க இதற்குத்தான் எத்தனை சோதனையும்,வேதனையும்!?! சிந்தித்துப்பாருங்க சான்றோர்களே, ஒரு தனி மனிதனின் பிரச்சினை என்றாலும் சரி,குடும்பப்பிரச்சினை என்றாலும் சரி,தெருப்பிரச்சினை என்றாலும் சரி,உள்ளூர்ப்பிரச்சினை என்றாலும் சரி,பக்கத்துவீட்டுப்பிரச்சினை என்றாலும் சரி,குடிநீர்ப்பிரச்சினை என்றாலும் சரி,கோர்ட் பிரச்சினை என்றாலும் சரி,சங்கத்தின் பிரச்சினை என்றலும் சரி,சாதிகளின் பிரச்சினை என்றாலும் சரி,கட்சிகளின் பிரச்சினை என்றாலும் சரி,காவல்துறை பிரச்சினை என்றாலும் சரி,எவரெவருக்கோ பிரச்சினை என்றாலும் இங்கே எவரிடமோ  பாராட்டு பெறலாம் என்ற கணிப்பில்? தினமும் தனக்கு உட்பட தன் குடும்பம் சகிதம் சமூகத்திற்கே தினசரி இரவு பகல் எந்நேரமும் அயராது சேவை என்னும் அத்தியாவசியப்பணி புரிந்து உதவிடும் பயணத்தின் ராஜா பேருந்துகளைத்தாங்க தீ வைத்து எரிக்கிறாங்க? கல்லெறிந்து சேதப்படுத்தறாங்க?? பயணிப்பவர்களின் வேதனை தெரிந்தும் தெரியாதவர்கள் போல பாவனை செய்துகொண்டு ஏதோ ஆத்திரத்தில் தீ வைப்பவர்களைப் போன்று நடிக்கிறாங்க?,லாரிகளை நொறுக்குறாங்க!, போக்குவரத்தினைத்தாங்க முடக்குறாங்க!

மனம் உடையும் போதெல்லாம்
என் கண்ணாடிகளை உடைகிறார்கள்
என்னை முழுவதும் எரிக்கிறார்கள்
இதனால் சமாதானம் அடைகிறார்கள்

என் உடைந்த கண்ணாடி சில்லுகளும்
என் எறிந்த உடலின் சாம்பல்களும்
உடைந்த மனதை ஓட்டவைத்ததா..??

இல்லையே...
மாறாக என்னை நம்பி என் மீது ஏறி
பயணித்தவர்களை பயணம் முடியும்
முன்னே பாதி வழியில் இறக்கிதான் விட்டது...

கல்லை எறிந்தவனே... தீயை வைத்தவனே...
நாளை நீயும் உன் பெண்டு,பிள்ளைகள் என் மீது தான்
பயணம் செய்ய வேண்டும் என்பதை
மட்டும் ஏன் மறந்தாய்...???

எனக்காக ஏங்கும் கிராமங்கள் எத்தனை
நான் வருவேனா என காத்திருக்கும்
உள்ளங்கள் எத்தனை அறிவாயா..???
என்றேனும் என் வலி உணர்வாயா...???

இப்படிக்கு....
பேருந்து......

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                  தங்களுக்கு ஆத்திரமூட்டும் செயலை செய்தவருக்கு கண்டனம் தெரிவிக்க இப்படியா! ஏதுமறியா அப்பாவித்தனமான அதுவும் பொதுமக்களுக்கு தினமும் சேவை செய்யும் உயர்நிலை சாதனமான குறிப்பாக அரசுப்பேருந்துகளை தீ வைத்துக்கொளுத்துவது!!,அடித்து நொறுக்கி சேதப்படுத்துவது, எவ்விதத்தில் நியாயம்? அரசுப்பேருந்துகள் தங்களது வெறுப்புக்கு ஆளானவர்களின் சொத்தா? நம்ம மக்களின் வரிப்பணமான மக்களின் தினசரி அத்தியாவசிய சேவைநிறுவனத்தின் சாதனமான பேருந்துகளை ஏன் இவ்வாறு அழிக்கவேண்டும்? பேருந்துகளா வழக்கு போட்டது? தீர்ப்பு சொன்னது? எப்படிங்க எங்கே எது நடந்தாலும் உடனே பேருந்துகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முடிகிறது.பேருந்துகளை எல்லாம் தீ வைக்கும் நீங்க மதுபானக்கடைக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்து நிதானமாக குடித்துவருகிறீர்களே!?!?!?..........அப்படியானால் பேருந்துகளுக்கு தீவைப்பது ,உண்மையிலேயே ஆத்திரத்தால்தானா?அல்லது திட்டமிட்ட சதிதானா? கொஞ்சம் யோசியுங்க..எறிந்தவனை விட்டுட்டு எறிகல்லை நோவது எப்படி தங்களால் மட்டும் சாத்தியமாகிறது????ஒன்றுமே விளங்கமாட்டேன்ங்குதுங்க????????
 
 
சட்டம் ஒழுங்கு இல்லை.
 • நீங்கள், கரூர் ரங்கசாமி, மேலும் வேறு 2 பேர்கள் பேரும் இதனை விரும்புகிறீர்கள்.
 •  
  Parameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம். பேருந்து நமக்காக மக்களுக்காக அல்லும் பகலும் இருபத்திநான்கு மணி நேரமும் அயராது சேவை செய்யும் அத்தியாவசியத் தேவை என்பதை உணர்ந்த நாம் தீ வைப்பது நியாயமா?சம்பந்தப்படவர்களை விட்டுவிட்டு பேருந்துகளுக்கு மட்டும் ஏன் இவ்வாறு கொடுமை செய்கிறோம்??சிந்தியுங்க,தங்களது ஆத்திரத்தை எங்கு காட்ட வேண்டுமோ அங்கு காட்டுங்க அதற்காக ஏதுமறியா அப்பாவியான பேருந்தும் அதில் பயணிக்கும் அப்பாவி பொதுஜனங்களும் என்ன தவறு செய்தாங்க??டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்கும் நாம் அரசுப்பேருந்துகளுக்கு மட்டும் ஏனோ மறந்துவிடுகிறோம்....சிந்தித்துப்பாருங்க,இனியாவது சிந்தித்து ப்பழகுங்க????? இப்படிக்கு ,,வெட்கமும் வேதனையும் நிறைந்த அன்பன் ....
   

  அதிமுக போராட்டத்தால் மக்கள் அதிருப்தி: 'வேண்டாமே சோகம்-வேண்டும் விவேகம்'

  Comment (16)   ·   print   ·   T+  
  சிதம்பரத்தில் நடந்த வன்முறையில் சேதமடைந்த அரசு பேருந்து| படம்:டி.சிங்காரவேலு.
  சிதம்பரத்தில் நடந்த வன்முறையில் சேதமடைந்த அரசு பேருந்து| படம்:டி.சிங்காரவேலு.
  சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதையடுத்து அதிமுகவினரின் சோகமும் அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதமும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது.
  தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டது கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமல்லாது நடுநிலையாளர்களுக்கும் வருத் தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயம் எந்தவித சோதனை யிலிருந்தும் மீளும் துணிச்சலும் ஆற்றலும் பெற்ற ஜெயலலிதா சிறையில் இயல்பாக இருக்கிறார்.
  ஆனால், இங்குள்ள அவரது கட்சியினரோ நிதானம் தவறி நடந்து அவருக்கு பெருத்த ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
  உண்ணாவிரதப் பந்தல்களிலும் பத்திரிகைப் பேட்டிகளிலும் இதைப் பொய் வழக்கு என்றும், சட்டம் தெரியாமல் நீதிபதி தீர்ப்பளித் தார் என்றும் கடுமையான வார்த்தை களைப் பயன்படுத்துகின்றனர்.
  இது நீதித் துறையில் இருப்பவர் களை சினம் கொள்ளச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் கருது கின்றனர்.
  தமிழகத்தின் நிர்வாகம் செயலி ழந்துவிடக்கூடாது, அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுடன் மத்திய அரசு இடையில் புகுந்து விடக்கூடாது என்பதற்காக ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக பதவியேற்க சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. அத்துடன் பெங்களூர் சிறையில் உள்ள சக கைதிகளிடம் சகஜமாக உரையாடியிருக்கிறார். சசிகலா, இளவரசி ஆகியோருக் கும் ஆறுதல் சொல்லி தைரியம் ஊட்டியிருக்கிறார். இதையெல் லாம் அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களது கருத்துகளாலும் போராட் டங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் கருதுகின்றனர்.
  இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கூறியதாவது:
  நீதித்துறையையும் சம்பந்தமே இல்லாமல் பிற அரசியல் கட்சி களையும் வம்புக்கிழுக்கும் வகை யில் சுவரொட்டிகளை ஒட்டி, ஜெயலலிதா மீது அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களுக்கு இருக்கும் அனுதாபத்தைக் குலைத்துவிடக் கூடாது. மக்களிடம் இப்போது ஏற்பட்டுள்ள அனுதாபத்தைக் கணக்கில் கொண்டு ஒருவேளை, விரைவிலேயே சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலை நடத்துவது என்று ஜெயலலிதா முடிவெடுத் தால் அதற்கு உதவும் வகையில் அமைச்சர்களும் கட்சி நிர்வாகி களும் அனைத்து தொகுதிகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும்.
  பெங்களூர் செல்ல வேண்டாம்
  கார்களில் அணிவகுத்து பெங்க ளூர் செல்வதை அதிமுகவினர் நிறுத்த வேண்டும். இது நிச்ச யம் கர்நாடக மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுடன் கட்சித் தலை வரையும் கேலிப் பொருளாக்கி விடும். உண்ணாவிரதம் இருப்பது, ஒப்பாரி வைப்பது போன்றவற்றை யும் நிறுத்த வேண்டும். இவற்றால் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அனு தாபம் எரிச்சலாகவும் கோபமாகவும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.
  காந்தி ஜெயந்தியன்று நாடு முழுவதும் துப்புரவு இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் தமிழ்நாட்டில் அதை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டுவதால் மக்கள் ஆதரவு தானாகவே திரளும்.
  சுவரொட்டிகள் மூலமும் பத்திரிகை விளம்பரங்கள் மூலமும் தங்களுடைய விசுவாசத்தைக் காட்ட வரம்புமீறி பயன்படுத்தும் வாசகங்கள் அவரை நிரந்தரக் கைதியாக்கிவிடும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
  மக்கள் அவதி:
  ஜெயலலிதா கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் திரையுலகினர் சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வர்கள் அதிமுகவினரை மிஞ்சும் வகையில் நீதித் துறையை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். இதுபோதா தென்று, அந்த பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப் பட்டது. மருத்துவமனை, அண்ணா சாலை போன்ற முக்கிய இடங்களுக்கு கடற் கரை சாலையில் இருந்து வருபவர்கள் நீண்ட தூரம் சுற்றி வரவேண்டியிருந்தது. இதில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் விதிவிலக்கல்ல. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.மதுரை அரசு போக்குவரத்து கழக எம்.டி.க்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
Friday, May 24, 2013,
மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழக எம்.டி.க்கு (மேலாண்மை இயக்குனர்) உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் நடராஜன். மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 25 ஆண்டுகள் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து, 2000ம் ஆண்டில் விருப்ப ஓய்வில் சென்றார். அவருக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதிய பலன்கள் வழங்கவில்லை.
இதையடுத்து நடராஜன் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தார். விருப்ப ஓய்வு பெற்று 7 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க மறுத்து அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடராஜன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சிங்வி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
குறைந்த சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளியை வழக்கு மேல் வழக்கு போட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்றாமல் தள்ளிப் போட்டுள்ளனர். ஒரு தொழிலாளி தனது கடும் உழைப்பால் சம்பாதித்த பணத்தை வழக்கிற்கு செலவு செய்ய நேர்ந்துள்ளது. இது சட்ட விரோதமானது. மனிதாபிமான செயலும் அல்ல.
விருப்ப ஓய்வுக்கு அனுமதித்துவிட்டு ஓய்வூதிய பலன்களை வழங்க மறுப்பது நியாயமல்ல. 10 ஆண்டாக அலைக்கழித்துள்ளதற்காக அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட எம்.டி.க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ஓய்வூதிய பலன்களுடன் சேர்த்து 2 மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

news by one india tamil

ஓசூர், செப்.29-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூருக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட கர்நாடகா அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வெளியான தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகா அரசு பஸ்கள் ஓசூருக்கு இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். ஓசூரில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படாததால் பெங்களூர் செல்லும் பயணிகள் பஸ் நிலையத்திலேயே தவித்தனர்.

இந்த நிலையில் நேற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தமிழக எல்லைப்பகுதியில் உள்ள ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கர்நாடக எல்லையில் அம்மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, 2-வது நாளாக ஓசூருக்கு கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல் காலை வரை தமிழக அரசு பஸ்களும் பெங்களூருக்கு இயக்கப்படவில்லை. காலை 8 மணிக்கு பிறகு, குறைந்த அளவில் பஸ்கள் ஓசூர் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த பஸ்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. அதே போல ஒருசில தமிழக அரசு பஸ்கள் பெங்களூர் நகருக்கு இயக்கப்பட்டன.

நேற்று முன்தினம் ஓசூர் நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. நேற்று காலை பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. சில இடங்களில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் பிற்பகலுக்கு மேல் ஒரு கும்பல் கடைகளை அடைக்குமாறு ரகளையில் ஈடுபட்டது. இதையடுத்து ஓசூர் நகர் முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

சனி, 27 செப்டம்பர், 2014

தெரிந்துகொள்வோம் :
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-2014

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு 17-09-2014அன்று

அன்புடையீர்,
                        வணக்கம். 
              லோகு  டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 17-09-2014புதன்கிழமை அன்று மாலை 2.00மணி முதல் மாலை 6.00 மணி வரை
கோயமுத்தூர்-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கோவை DO ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் சத்தியமங்கலம்- ராயல் பெட்ரோலியம்-இந்தியன் ஆயில் பங்க் வளாகத்தில் நடைபெற்றது.
             கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறும் அனைவரும் நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும்,
 அரிமா K.லோகநாதன்-தலைவர்,
 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-சத்தியமங்கலம்.
  மற்றும் நிர்வாகி;-
       லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் மற்றும் 
வாகன புகை மாசு பரிசோதனை மையம் - 
சத்தியமங்கலம்
 ஈரோடு மாவட்டம்.
 தொடர்புக்கு, +91 9443021196

வியாழன், 10 ஜூலை, 2014

ஹெல்மெட்? பைக் ஓட்டிகளே!

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.இது சதீஷ் சென்னை அவர்களது பதிவுங்க.சதீஷ் சென்னை அவர்களுக்கு நன்றிங்க.
நேற்று சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மோட்டர் சைக்கிளில் அலுவல் பயணம்.  நாலுவழி பாதை என்னவோ வண்டி ஓட்டிட்டு போறதுக்கு நல்லா தான் இருக்கு. எதிர்த்தாப்பலே வண்டி எதுவும் வரலை. அகலமான ரோடு. சும்மா சல்லுன்னு போகுது வண்டி.

தண்டலம் தாண்டி போயிட்டு இருக்கும்போது எதிர் சைடில் ஒரு சூப்பர் காரு பாஸ் ஆச்சு.  அது என்ன வண்டின்னு லைட்டா திரும்பினேன். அவ்வளவு தான். எதிர்காத்தில் என் ஹெல்மெட்டோட வைசர் சட்டுன்னு மேலே தூக்கி, அதே வேகத்தில் ஹெல்மெட் எழும்ப ஆரம்பிச்சிருச்சு. தாடையோடு சேர்த்து பெல்ட் போட்டிருந்ததால் கழுத்தோடு மேலே தூக்கி, கண்ணை மறைச்சு, ரெண்டு செக்கண்டில் பேஜார் ஆயிருச்சு.  முகத்தை நேரா திருப்பி லெப்ட் ஹான்டால் ஹெல்மெட்டை பிடிச்சிகிட்டதால் கழுத்து தப்பிச்சுச்சு.

தப்பு என்னோடது தான்... ஸ்பீடை குறைக்காமலேயே தலையை திருப்பினது தப்பு தானே??  ஹெல்மெட்டு போட்டா தலையை அப்படி இப்படி திருப்பாம வண்டி ஓட்டனும்னு எவ்வளவு சொன்னாலும் புரியமாட்டேங்குது.

அது பரவாயில்லை... சென்னையில் இருக்கிற குண்டும் குழியும் மேடும் பள்ளமுமான ரோட்டில் ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டும்போது வண்டி ஜெர்க் அடிக்கும்போதெல்லாம் தலையை யாரோ தட்டிகிட்டே வர்ற மாதிரி ஒரு பீலிங் வருமே... தலைவலி!!  மனுஷங்களோட முக அமைப்பு பல விதமா இருந்தாலும், ஹெல்மெட் என்னமோ நாலே நாலு சைசில் தான் கிடைக்குது. (S,M,L,XL). அதை போட்டுக்கிட்டு டைட்டோ லூசோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே ஒட்டி தொலைக்க வேண்டியது தான்.

இன்னொரு அட்ஜஸ்ட்மேன்ட்டும் இருக்கு.  பைபர் கிளாஸ்சில் வைசர் பண்ணி வெச்சிருக்காங்களா... சீக்கிரமே டல் அடிச்சிருது.. அதனால் கண்ணையும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டே உத்து பாத்துகிட்டு தான் வண்டி ஓட்டனும் நாம.  சாயந்தரம் அஞ்சு மணி ஆயிடிச்சுன்னா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டறதே கஷ்டம்.  எதிரில் வர்ற வண்டிகளோட ஹெட் லைட் வெளிச்சம் பைபர் கிளாசில் வித்தை காட்டும்போது ரோடும் தெரியாது குண்டு குழியும் தெரியாது குறுக்கே பாயுற நம்ம ஜனங்களும் தெரியாது.  ரெம்ம்ம்மம்ப  கஷ்ட்டம்ம்ம்ம்..

மழை காலம் வந்தால் இன்னும் சூப்பர்.... மழை துளி எல்லாம் வைசரில் தேங்கி நின்னு.. ஒண்ணுமே தெரியாது.... நம்ம கவனம் எல்லாம் வண்டி ஓட்டரத்தை விட்டுட்டு விசரை தூக்கி பிடிச்சுக்கரதிலேயோ... அதை துடைச்சு விட்டுட்டே இருக்கரதிலேயோ தான் இருக்கணும்.

இது தவிர இலவச இணைப்பா.... வெயிட்டான ஹெல்மெட்டை தலையில் வெச்சு ஒழுங்கில்லாத ரோட்டில் வண்டி ஒட்டுறதால் வர்ற கழுத்து வலி, முதுகு தண்டு வலி இன்ன பிற வலிகள் இனாம்.  என்ஜாய்!

சரி... இப்படி இந்த ஹெல்மெட்டை போடணும்னு என்ன கட்டாயம்?  ஆமாம் கட்டாயம் தான்.

சாலை விபத்தில் நிறைய பேரு இறந்து போறாங்கன்னு ஒரு வருத்தமான ரிப்போர்ட்டு ஒவ்வொரு வருஷமும் வளர்ந்துகிட்டே போகுது.  அதை தடுக்கணும்னா என்ன செய்யணும்??

என்ன சொன்னீங்க.... ரோட்டை ஒழுங்கா போடறது, டிராபிக் ரூல்ஸை கட்டாயமா அமல்ப்படுத்தறது... எல்லா ரோட்டிலும் முறையான சைன் போர்டுகள் வெக்கறது.. வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்பா கடைபிடிக்க வெக்கறது..... இப்படி எதையெல்லாம் செஞ்சு விபத்தை குறைக்கணுமோ அதை எல்லாம் செய்யனும்னா சொல்றீங்க???

இல்லீங்க...நீங்க எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... ரோடு அப்படி தான் இருக்கும்.. அதில் ஆக்கிரமிப்பு இருக்கும், ரோட்டிலே எல்லோரும் குறுக்க நெடுக்க தான் போவாங்க, ஸ்பீடு, ரேஷ் டிரைவிங் எல்லாம் இருக்கும், எந்த வண்டியும் ரோட்டில் ஒழுங்கா போகாது..... போலீசோ, அரசாங்கமோ  இதை எல்லாம் எதுவும் செய்யாது...நீங்க தான் ஹெல்மெட் போட்டு உங்களை காப்பாத்திக்கணும்!  இது தான் சட்டம்.

ஆக்சுவல்லா.. இந்த விஷயம் கோர்ட்டு படி ஏறினபோது, கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு ஸ்ட்ரைட்டா கோர்ட்டு உத்தரவு போட்டுச்சு.  அதாவது விபத்துக்களை குறைக்கறது பத்தி எதுவுமே யோசிக்காம, அதுக்கான ஏற்பாடுகளை செய்யாம, விபத்துக்களால் ஏற்படுகிற மரணத்தை குறைக்கறதுக்காக ஹெல்மெட்டை போட்டே ஆகணும்னு உத்தரவு போட்டுச்சு நீதிமன்றம்.  இப்படி கட்டாயப்படுத்த தேவையில்லைன்னு எவ்வளவோ வாதாடி பாத்தும் கோர்ட்டு அதை கேக்கலை.  தீர்ப்பு வேற நீதி வேறன்னு நமக்கு தெரியாதா?? நீதிமன்றங்கள் வெறும் தீர்ப்பை தான் தருகின்றன.. நீதியை அல்லவே?

சரி, அப்போ நாமளும் 'சட்டப்படியே' பேசுவோம்!

16-09-2005 அன்னைக்கு மத்திய அரசு, மத்திய மோட்டர் வாக சட்டம், 1989 இல் விதி 138 இல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, டூ வீலர் விக்கிற நிறுவனங்கள் ஒவ்வொரு டூ வீலரோடும் ஒரு ஹெல்மெட்டை (ISI தர சான்று பெற்று, BIS வகுத்திருக்கும் ஸ்பெசிபிகேஷன் படியான ஹெல்மெட்) இலவசமாக கொடுக்கணும்.  டூ வீலரை பதிவு செய்யும் பொது, ஹெல்மெட்டை கொடுத்ததுக்கான ரசீது இருந்தால் தான் வண்டியையே ரெஜிஸ்டர் செய்யணும்நு அந்த திருத்தம் சொல்லுது.  ஹெல்மெட் என்பது கட்டாய அக்ஸசரியாக கருதனும்னு அந்த சட்டம் சொல்லுது.

ஆனா எந்த டூ வீலர் கம்பெனியும் அதை கொடுக்கலை.  அப்படி எந்த நிறுவனமும் கொடுக்கலைங்கரதுக்காக யாரும் கோர்ட்டு படி ஏறலை. நீதிமன்றமும் அரசும் அதை பத்தி கவலையே படலை.  பாதிக்கப்பட்ட வண்டி ஓட்டிகளுக்கு எந்த நியாயமும் கிடைக்கலை.  அதுக்காக வாதாட யாருமே இல்லை.

இது நடந்து ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நாடு அரசும் ஒரு உத்தரவை  போட்டுது. கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு.  அது பல பல உத்தரவுகளை போல மற்றும் ஒரு உத்தரவா கெசட்டில் தூங்கிட்டு தான் இருந்துச்சு. யாரும் ஹெல்மெட்டை போடலை.

இப்படியான சூழலில் தான் கோர்ட்டுக்கு நம்ம டிராபிக் ராமசாமி போயி கட்டாய ஹெல்மெட்டுகான உத்தரவை சந்தோஷமா வங்கி வந்தாரு.  அவரை மக்கள் நல விரும்பின்னு கொண்டாடிச்சு சென்னை!  அதே நேரத்தில் மக்களை பாதிக்கிற, வாகன ஓட்டிகளை பாதிக்கிற முறையற்ற போக்குவரத்தையும், மத்திய அரசு சட்டத்தை நாலு வருஷமா மீறீட்டு இருக்கிற டூ வீலர் நிறுவனங்களையும், போக்குவரத்துக்கே லாயக்கிலாத சாலைகளையும், அவர் கவனத்தில் எடுத்துக்கலை.. அதை மக்களும் பெரிசா எடுத்துக்கலை!

இன்னைக்கு எந்த ரோட்டிலே வேணும்னாலும் டூ வீலர் காரங்களை விரட்டி விரட்டி பிடிக்கிற ஆக்டிவ்வான போலீஸ் நண்பர்களை நாம பார்க்கலாம்... அவங்க என்ன செய்வாங்க?? சட்டம் என்ன சொல்லுதோ அதை தானே அவங்க செய்யணும்?  (எல்லா சட்டத்தையும் அவங்க மதிக்கிராங்களான்னு எல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்க கூடாது)

சரி... இப்படி கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு சட்டம் போட்டாச்சு... விபத்துக்கள் குறைஞ்சுதா??  இல்லவே இல்லை! விபத்துக்களில் ஏற்படுற மரணங்கள் வேணும்னா குறைஞ்சிருக்கு!

அரசோட கவனம் விபத்தை குறைப்பதில் தான் இருந்திருக்கனுமே தவிர, விபத்து நடந்தால் ஏற்படுற மரணத்தை குறைப்பதில் இல்லை.  ஆனா அந்த கவனம் இன்னமும் வரவே இல்லை.   சாலைகளை அகலப்படுத்தறது, புதிய மேம்பாலங்களை கட்டுறது, சீரான போக்குவரத்துக்கு வசதி பண்ணி கொடுக்கறது, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது, போக்குவரத்து விதிகளை முறையா அமல்படுத்தறது, விதிமீறல்களுக்கு கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கறது... எல்லாத்துக்கும் மேலே சீரான தரமான முறையான ரோடுகளை போடறதுன்னு.. நிறைய விஷயங்களுக்கு அரசின் கவனம் வந்தாகணும்.  சென்னை ஒரு பேரு நகரம்னே சொல்லிக்க முடியாத அளவுக்கு இங்கத்த சாலைகள் இருக்குன்றதை அரசு உணர்ந்து அதை போக்க கவனம் செலுத்தணும்.

அந்த கவனம் வர்ற வரைக்கும், எல்லா கஷ்டத்துடனேயும் எல்லா இம்சைகளுடனேயும் எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கோங்க.... பத்திரமா!