வெள்ளி, 18 ஏப்ரல், 2014

போக்குவரத்துக் கல்வி-1

மரியாதைக்குரியவர்களே, 
                        வணக்கம்.   அனைவரையும் “சாரதிகள் இந்தியா” வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சாரதிகளின் வாழ்க்கைச் சூழலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்னர் போக்குவரத்துக் கல்வி பற்றி நமக்கு தெரிந்தவரை பகிர்ந்து கொள்வோம்.
           மனிதனின் இன்றியமையாத தேவைகளான உணவு, உடை,உறையுள் அதாவது இருப்பிடம் ஆகிய தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி செய்வது போக்குவரத்து மட்டுமே.. போக்குவரத்தில் நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன.அவை (1) சாலைப் போக்குவரத்து, (2)இரயில் போக்குவரத்து,(3)நீர்வழிப் போக்குவரத்து,(4)ஆகாயப் போக்குவரத்து ஆகியன...

 இவற்றில் அதிகமாகப் பயன்படுவது சாலைப் போக்குவரத்து ஆகும்.
 சாலைப்போக்குவரத்தை (1)பயணிகள் போக்குவரத்து,(2)பொருள் போக்குவரத்து,(3) மற்றவை என்று பிரிக்கலாம்.
 இவற்றிலும் (1)பொதுப் பயன்பாட்டிற்கான போக்குவரத்து.(2)தனிப்பட்ட பயன்பாட்டிற்கான போக்குவரத்து, எனப் பிரிக்கலாம்.
 இவற்றிலும் (1)குறுகிய தூரப் பயணம் (2)நீண்ட தூரப் பயணம் என்று பிரிக்கலாம்.
இவற்றில் (1) தினசரிப் பயணம் (2)தேவைப்பட்டபோது பயணம் என்று பிரிக்கலாம்.
இவற்றை பலவகையாகப் பிரிக்கலாம்.அதாவது (1)அவசரப் பயணம்,(2)அத்தியாவசியமான பயணம்,(3)அலுவல் பணி காரணமாக பயணம்,(4)பொழுதுபோக்கிற்கான பயணம்,(5)நாட்டைக் காக்க பயணம்,(6)சமூக சேவைக்கான பயணம்,(7)அறிவைப் பெருக்க பயணம்,(8)உறவுமுறைக்கான பயணம் என பலவாறாகப் பிரிக்கலாம்.
 தனி வாகனப் போக்குவரத்தில் கூடுதலாக விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்திற்கே பயணம் செய்யலாம்.
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக