சனி, 19 ஏப்ரல், 2014

பஸ்சை யானை துரத்துவது

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.



சத்தியமங்கலம்: 
         சத்தியமங்கலம், தலமலை அருகே யானை கூட்டத்திடம் தனியார் பஸ் ஒன்று சிக்கிக் கொண்டதால் பயணிகள் அலறினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்பம் வழியாக தாளவாடிக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ராமரணை பஸ் நிறுத்தம் அருகே ஒற்றை பெண் யானை சாலையோர செடிமறைவில் நின்று கொண்டிருந்ததை ஓட்டுனர் பார்த்தார். அவர் பஸ்சை மெதுவாக ஓட்டி செல்ல முயன்றபோது யானை சாலையை வழிமறித்து நிற்பதும் பின் வனத்துக்குள் செல்வதுமாக போக்கு காட்டியது. பஸ்சை யானை துரத்துவதும் ஓட்டுனர் பஸ்சை பின்னால் ஓட்டுவதுமாக சில நிமிடங்கள் நடந்தன. இதனால், ஒரு மணி நேரமாக அந்த இடத்தை கடக்கமுடியாமல் ஓட்டுனர் தவித்ததுடன் பயணிகளும் அலறினர்.

ஒருவழியாக யானை தாக்குதலில் இருந்து தப்பித்து பஸ்சை ஓட்டி சென்றார். இதன்பிறகு, சற்றுதூரத்திற்கு அப்பால் பஸ்சை நிறுத்தி பார்த்தபோது, 11 யானைகள் கொண்ட ஒரு யானை கூட்டம் குட்டிகளுடன் சாலையை கடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, யானை கூட்டத்தை தாய் யானை வழி நடத்துவது இயல்பான ஒன்று. அவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது தாய்யானை அதற்கு முன்பாகவே சென்று அதன் வழித்தடத்தை உளவு பார்க்கும். இவ்வாறு உளவுபார்த்துதான் தனது கூட்டத்தை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தாய் யானை இம்மாதிரி நடந்து கொண்டது‘‘ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக