Thursday, December 17, 2009
SETC - அவசரப்பட்டுட்டேனோ??
போன வாரம் தான் நம்ம அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பத்தி ஆஹா ஓஹோன்னு எழுதி வெச்சேன்!
கொஞ்சம் அவசரப்பட்டுடேனொன்னு தோணுது இப்போ!
தொடர்ந்து ரெண்டு நாளா ரெண்டு விபத்து..
முந்தாநாளு ராத்திரி சென்னையில் இருந்து பெங்களூர் போன வண்டி வாணியம்பாடி கிட்டே ஒரு லாரி பின்னாடி இடிச்சு.. ஸ்டீரிங் பெண்டு ஆயி மேற்கொண்டு போக முடியாம நின்னு போச்சு... ஆளுங்களை எல்லாம் இறக்கி விட்டுட்டு வேற பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டு இருந்திருக்காங்க டிரைவரும் கண்டக்டரும்... அந்த நேரம் பாத்து பஸ்சுக்கு பினாடி ஒரு வேன் வந்து டமார்னு இடிச்சதிலே அந்த பஸ்சு நகர்ந்து பஸ்சு முன்னாடி நிட்டுட்டிருந்த பயணிகள் மேலே மோதி அஞ்சு பேறு காலி, அதே இடத்திலேயே!
இது இப்படின்னா...
நேத்து ராத்திரி சேலத்தில் இருந்து ராமேசுவரம் போன பஸ்சு அரவாக்குறிச்சி கிட்டே பிரேக் டவுன் ஆகி நின்னுபோச்சு... அதே மாதிரி ஆளுங்களை இறக்கி வேற பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டு இருக்கிற நேரம் பாத்து ஒரு லாரி அந்த கூட்டத்துக்குள்ளே திடீர்ந்து புகுந்து இடிச்சு தள்ளினதுலே அஞ்சு பேறு மரணம்!
ரெண்டு நாளில் பத்து பேரு...
முதல் சம்பவத்தில், டிரைவரோட அஜாக்கிரதையால லாரி மேல மோதி இருக்காரு..
ரெண்டாவது சம்பவத்தில் வண்டியே பிராப்ளம்...
இப்போ, விரைவு போக்குவரத்து கழகத்திலே மெயிண்டனன்ஸ் மேல சந்தேகமா இருக்கு!
பஸ்சு வாங்கி கொடுக்கறது அரசாங்கத்தோட வேலை! அதை சரியா செஞ்சிட்டாங்க!
ஆனா அதை பராமரிக்கிறது அந்த அந்த கொட்ட பணிமனை அதிகாரிங்களோட கடமை இல்லையா?? என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க அவங்க??
டிரைவருங்களுக்கு போதுமான பயிற்சியோ, ஓய்வோ, இல்லாததும் ஒரு சின்ன குறை... தொடர்ச்சியா வேலை பாக்கவேண்டி இருக்கிறதால ஏற்படுற வெறுப்பு, சலிப்பு, இதோட சேர்ந்து ஒய்வின்மையால் இருக்கிற அசதி... இதெல்லாம் விபத்துக்கு சின்ன சின்ன காரணியாய் அமைஞ்சிடுது...
இனி மேலாவது, பேருந்துகளை ஒழுங்கா பராமரிக்கிறது, நீண்ட பயணத்துக்காக பணிமனையில் இருந்து வண்டியை எடுக்கும்போதே, முழுமையா பரிசோதிச்சு அதுக்கான கிளியரன்ஸ் கிடைச்சபின்னாடி எடுக்கறது, டிரைவருக்கு போதுமான ஒய்வு கொடுக்கறது, யோகா மாதரியான கவனம் கூட்டும் பயிற்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக