மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை 04 -05 -2014 அன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நெஞ்சு பொறுக்குதில்லையே ஒளிப்பதிவு நிகழ்ச்சி ''பேருந்துப்படிக்கட்டுப் பயணம் விபத்தை தவிர்க்க முடியுமா? தவிர்க்க முடியாதா?''
என்ற தலைப்பில் நடைபெற்றது.எனக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வாய்ப்பளித்த கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும்,ஒளிப்பதிவு தயாரிப்பாளர் வழக்கறிஞர் திரு.ஆ.ஜான் தன்ராஜ் B.A.M.L., அவர்களுக்கும்,ஒருங்கிணைப்பாளர் திரு.கிரிஷ்குமார் அவர்களுக்கும்,ஒளிப்பதிவு குழுவினர்களுக்கும் சமூக விழிப்புணர்வுக்கான இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும், கானா பாடலை பாடி எங்களுக்கு பரவசமூட்டிய திரு.கானாவினோத் , கானா பாடலாசிரியர் மற்றும் கானா பாடகர் அவரது குழுவினருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு சார்பாக நன்றிகள் பல........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக