வணக்கம். ஊடகச் செய்திகளின் தொடர்ச்சி......
நன்றி்” தின மலர் -தேதி 22-04-2014
பல்லடம் : பால் லாரி டிரைவரை தாக்கிய, அரசு பஸ் கண்டக்டரை, பல்லடம் போலீசார் கைது செய்தனர்.
சோமனூர், செந்தில் நகரை சேர்ந்தவர் சந்திரன், 37, தனியார் பால் நிறுவனத்தில் லாரி டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் காலை, குடிமங்கலம் பகுதியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு, காரணம்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். காலை 6.30 மணியளவில், அண்ணா நகர் பகுதியில் சென்றபோது, சிவகாசியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற, அரசு போக்குவரத்து கழக பஸ்சை முந்த முயற்சித்துள்ளார். இதில், அரசு பஸ், ரோட்டிலிருந்து, மண் ரோட்டில் இறங்க நேரிட்டது. ஆத்திரமடைந்த அரசு பஸ் டிரைவர் சுபாஷ் சந்திரராஜா, 42, பஸ்சை வேகமாக ஓட்டிச்சென்று, லாரியை, லட்சுமி மில் பகுதியில் மறித்து நிறுத்தியுள்ளார். பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் முத்துராமன், 45, ஆகியோர், லாரி டிரைவர் சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தாக்கிவிட்டு, பஸ்சை எடுத்துக்கொண்டு கோவை சென்று விட்டனர். காயமடைந்த லாரி டிரைவர் சந்திரன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து, பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், காலை 11.00 மணிக்கு, கோவையில் இருந்து மீண்டும் சிவகாசி செல்ல வந்த அரசு பஸ்சை, பல்லடத்தில் மறித்தனர். டிரைவர், கண்டக்டரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்; ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பயணிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டிரைவர், கண்டக்டரை, பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து வந்த போலீசார், பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். அதன்பின், கண்டக்டர் முத்துராமனை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக