மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அனைத்திந்தியா சாரதிகள்(ஓட்டுநர்கள்) வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.இந்த பதிவிலிருந்து இன்சூரன்ஸ் பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவிடுகிறோம்.தவறுகள் ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய உதவிட வேண்டுகிறோம்.
இன்சூரன்ஸ் முதல் பாகம்;-
மோட்டார் வாகன இன்ஷூரன்ஸினால் நன்மைகள் என்ன?
அனைத்திந்தியா சாரதிகள்(ஓட்டுநர்கள்) வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.இந்த பதிவிலிருந்து இன்சூரன்ஸ் பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவிடுகிறோம்.தவறுகள் ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய உதவிட வேண்டுகிறோம்.
இன்சூரன்ஸ் முதல் பாகம்;-
மோட்டார் வாகன இன்ஷூரன்ஸினால் நன்மைகள் என்ன?
சாலையில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால், மோட்டார் இன்ஷூரன்ஸ் 100% அவசியம். உங்கள்
வாகனம் விபத்தில் சிக்கி சேத மானால், திருடு போனால், பயணிகள்
உயிரிழந்தால், பாதசாரிகள் பாதிக்கப்பட்டால் உங்களை பொருட் சேதத்திலிருந்து
பாதுகாப்பதற்காக இந்த மோட்டார் இன்ஷூரன்ஸ் உதவிடும். மேலும், உங்கள்
வாகனம் மோதி இதர வாகனம், சொத்துகள் பாதிப்புக்கு உள்ளாகும்போதும் இன்ஷூரன்ஸ் உதவி செய்யும். இன்ஷூரன்ஸ் செய்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள்
அளிக்கின்றன? இன்சூரன்ஸை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை காண்போம்.
இன்ஷூரன்ஸ் கட்டாயம்!
சாலைகளில் ஓடும் வாகனங்கள் அனைத்துக்கும்
மோட்டார் இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்திருக்க வேண்டும் என்பது சட்டம்.
வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் போன்றவை
கட்டாயம் இருக்க வேண்டும். கூடவே, இன்ஷூரன்ஸ் பாலிஸி சான்றிதழின் நகலையும் வைத்திருக்க வேண்டும்.
எங்கே பாலிஸி எடுப்பது? புதிய
வாகனமாக இருந்தால், ஷோரூமிலேயே பாலிஸி எடுப்பது குறித்த விவரம்
சொல்வார்கள். உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் அருகிலுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவ
னத்துக்கு நேரில் சென்று பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். கூடவே வாகனத்தையும்
எடுத்துச் சென்றால் வேலை சுலபமாக முடிந்துவிடும்.
பாலிஸியில்
உங்கள் பெயர், முகவரி, வாகனத்தின் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸிஸ் எண்கள்
போன்றவை பாலிஸி சான்றிதழில் சரியாக இருக்கிறதா என்று பாலிஸி எடுக்கும்போதே
சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு இருந்தால், உடனே அதைத் திருத்தச்
சொல்ல வேண்டும். திருத்தப்பட்ட இடத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலக
முத்திரை இருக்க வேண்டியது அவசியம். அதேபோல, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின்
ஆவணங்களிலும் அந்த மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் கிளைம்
செய்யும்போது சிக்கல் வரும்.
தொடரும்............(ஒன்று)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக