மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அனைத்திந்தியா சாரதிகள்(ஓட்டுநர்கள்) வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.இந்த பதிவிலிருந்து இன்சூரன்ஸ் பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவிடுகிறோம்.தவறுகள் ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய உதவிட வேண்டுகிறோம்.
இன்சூரன்ஸ் தொடர்ச்சி..(நான்காவது பகுதி)
‘வொர்க்மேன்ஸ் காம்பென்சேஷன்’என்றால் என்ன?
உரிமையாளர் வாகனத்தை ஓட்டாமல் டிரைவர் ஓட்டுவதாக இருந்தால், ‘வொர்க்மேன்ஸ் காம்பென்சேஷன்’ சட்டப்படி கொடுக்க வேண்டிய நஷ்டஈட்டுக்குத் தனியே பாலிஸி எடுப்பது அவசியம். கூடுதல் பிரீமியம் செலுத்தி இந்த பாலிஸியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல், வாகனத்தின் உரிமையாளருடன் குடும்பத்தினர் அடிக்கடி பயணம் செய்பவர்களாக இருந்தால், அவர்கள் பெயரையும் பாலிஸியில் பதிவு செய்து, தனி நபர் விபத்து பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிஸியில் டிரைவருக்கு அதிக பட்சமாக ஒரு லட்ச ரூயாய்க்கும், மற்றவர்களுக்கு 2 லட்ச ரூபாய்க்கு கவரேஜ் இருக்கும். மேலும், காரில் உறவினர்கள் – நண்பர்கள்- அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் என பலர் பயணம் செய்யக் கூடும் என்றால், இவர்களுக்கும் பயணிகளுக்கான தனி நபர் விபத்து பாலிஸி எடுத்துக் கொள்ளலாம்.

பயணிகளுக்கான தனி நபர் விபத்து பாலிசி.........
பயணிகள் பாலிஸி, வாகன உரிமையாளருக்கும் டிரைவருக்கும் பொருந்தாது. வாகனத்தில்
சி.என்.ஜி, எல்.பி.ஜி சிலிண்டர்களைப் பொருத்தினால், அவற்றை ஆர்.டி.ஓ-வின்
அனுமதியோடு மேற்கொள்ள வேண்டும். இந்த விவரத்தை வாகனத்தின் பதிவுப்
புத்தகத்தில் சேர்த்து, நகல் எடுத்துக் கொண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில்
கொடுக்க வேண்டும். இதற்கான பிரீமியம், இந்த கிட்டின் மதிப்பில் சுமார் 4
சதவிகிதம் அதிகமாக இருக்கும். வெளிநாட்டு
கார் என்றால், வாகனப் பொறியாளர் ஒருவரின் மதிப்பீட்டை அடிப்படையாகக்
கொண்டு, அதன் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப பிரீமியம்
இருக்கும். பொதுத்துறை
இன்ஷூரன்ஸில் பிரீமியக் கட்டுப்பாடு 2009, ஜனவரி முதல்
நீக்கப்பட்டுவிட்டது. அதனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கூடுதல் கவரேஜ்
அளித்து, அதற்கு ஏற்ப பிரீமியத் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நிலை
உருவாகி இருக்கிறது.
பிரீமியச் செலவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
வாகன
இன்ஷூரன்ஸ் எடுப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாகன சங்கத்தின் உறுப்பினர்
என்றால், பாதுகாப்பு பற்றி அவர் விழிப்பு உணர்வு மிக்கவராக இருப்பார் என்று
கருதி, அவருக்கு பிரீமியத்தில் 5 சதவிகிதம் (அதிகபட்சம் 100-500 ரூபாய்)
தள்ளுபடி தரப்படுகிறது. திருட்டுத் தடுப்புக் கருவி, வாகனத்தில் பொருத்தி இருந்தால், பிரீமியத்தில் சலுகை இருக்கிறது.
‘லெய்ட் அப் பீரியட்
பாலிஸி’
வாகனத்தைப் பயன்படுத்தாதபோது… வேலை
விஷயமாக வெளிநாடு அல்லது வெளி மாநிலத்துக்கு 3 அல்லது 6 மாத
காலத்துக்குச் சென்றால், வாகனத்தை கார் ஷெட்டில் பாதுகாப்பாக நிறுத்தி
விட்டுச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, அந்தக்
காலத்துக்கான பிரீமியச் செலவு வீண்தானே? பிரீமியச் செலவைக் குறைத்து,
அந்தக் காலத்தில் தீ, வெள்ளம், திருட்டு, கொள்ளை போன்றவற்றிலிருந்து
மட்டும் வாகனத்தைப் பாதுகாக்க பாலிஸி எடுக்கலாம். இதை ‘லெய்ட் அப் பீரியட்
பாலிஸி’ என்பார்கள். விஷயத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம்
தெரிவித்தால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், இன் ஷூரன்ஸ்
நிறுவனம் சொல்லும் முறையில் வாகனத்தை இந்தக் காலகட்டத்தில் பாதுகாக்க
வேண்டியது அவசியம். ஊர்
திரும்பிய பிறகு காரை ஷெட்டிலிருந்து எடுத்து விட்டு, இன்ஷூரன்ஸ்
நிறுவனத்துக்கு எழுத்து மூலம் தெரிவித்து விட்டால், உங்கள் வழக்கமான பாலிஸி
நடைமுறைக்கு வந்து விடும். இந்த முறையில் பிரீமியச் செலவைக் குறைக்க
முடியும். நோ கிளைம் போனஸ் இன்ஷூரன்ஸ்
நிறுவனத்துக்குக் கூடிய வரையில் நஷ்டம் வராமல் அதாவது, இழப்பீடு கோரும்
சூழ்நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது நமக்கும் நல்லது;
இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நல்லது.
‘நோ கிளைம் போனஸ்’
ஓராண்டில் இழப்பீடு எதுவும் பெறவில்லை
என்றால் ‘நோ கிளைம் போனஸ்’ என்ற சலுகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்
அளிக்கின்றன. ஓராண்டு
இழப்பீடு எதுவும் இல்லாமல் பாலிஸி காலாவதியாகும் தேதிக்கு முன்
புதுப்பித்தால், அடுத்த ஆண்டுக்கான பிரீமியத்தில் தள்ளுபடி
கொடுக்கிறார்கள். சில நிறுவனங்கள் அதே பிரீமியத்துக்குக் கூடுதல் கவரேஜ்
தருகின்றன. அதே
நேரத்தில், இழப்பீடு கோரப்பட்டிருந்தால், அடுத்து வரும் ஆண்டில் பிரீமியம்
அதிகமாகும். இதை ‘மாலஸ்’ (Malus) என்பார்கள். இந்த அதிகரிப்பு 10
சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதம் வரை இருக்கும். இந்த
பிரீமியத் தள்ளுபடி ஓன் டேமேஜ் பாலிஸியின் பிரீமியத்துக்கு மட்டுமே
கிடைக்கும். மேலும், தொடர்ந்து ‘கிளைம்’ செய்யவில்லை என்றால் மட்டுமே
ஒவ்வொரு ஆண்டும் தள்ளுபடி சதவிகிதம் அதிகரிக்கும். இடையில், கிளைம் செய்த
பிறகு பாலிஸியைப் புதுப்பித்தால், போனஸ் சதவிகிதத்தைக் குறைத்து
விடுவார்கள். இழப்பீடு தொகை ‘நோ கிளைம் போனஸ்’ தொகையைவிட குறைவாக
இருந்தால், இழப்பீடு கேட்காமல் இருப்பது நமக்கு லாபம். உங்களுடைய
பாலிஸி காலாவதி ஆகிவிட்டது, அதே நேரத்தில் நோ கிளைம் போனஸ் இருக்கிறது
என்றால், பாலிஸி காலாவதியான திலிருந்து 90 நாட்களுக்குள் புதுப்பித்தால்,
நோ கிளைம் போனஸ் பிரீமி யத் தள்ளுபடியைப் பெற்றுக் கொள்ளலாம். புதிய
வாகனம் வாங் குவதாக இருந்தால், பழைய வாகனத்தின் (விற்பனை செய்யும்
பட்சத்தில்) நோ கிளைம் போனஸை புதிய காரின் பாலிஸிக்குப் பயன்படுத்திக்
கொள்ள முடியும். இதற்கு வாகனத்தை விற்கும் முன்னதாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு
முன் கூட்டியே நோ கிளைம் போனஸ் இருப்பதைத் தெரிவிக்க வேண்டும். நோ கிளைம் போனஸ் எவ்வளவு? ஒரு
வாகனத்தை விற்றுவிட்டு, புதிய வாகனம் வாங்கும்போது ‘நோ கிளைம் போனஸை’
பயன்படுத்திக் கொள்ள முடியும். பாலிஸி காலாவதி ஆவதற்கு முன் இப்படி
புதுப்பிப்பது அவசியம்.
‘வாலன்டரி டிடக்டிபிள்
‘வாலன்டரி
டிடக்டிபிள்’ (Voluntary Deductible) என்று ஒரு விஷயம் இருக் கிறது. இதில்
‘ரூ.5,000 அல்லது ரூ.10,000 வரையிலான பாதிப்பு களை நானே சமாளித்துக்
கொள்கிறேன். அதற்கு இழப்பீட்டுத் தொகை வேண்டாம்’ என்று சொல்லிவிட்டால்,
பிரீமியம் குறையும். இது பாலிஸிதாரருக்கு லாபகரமாகவே இருக்கும். சிறிய
தொகைக்கு இழப்பீடு கோரிவிட்டு, நோ கிளைம் போனஸ் சலுகையை இழக்க வேண்டாம்
இல்லையா?
உடல் ஊனமுற்றவர்களுக்கு, அவர்கள் ஓட்டுவதற்கு வசதியாக வாகனம் மாற்றி வடிவமைக்கப்பட்டு இருந்தால், பிரீமியத்தில் (ஓன் டேமேஜ்) 50 சதவிகிதம் தள்ளுபடி இருக்கிறது. ஊனமுற் றோருக்கு பிரத்யேக சேவை செய்யும் நிறுவனங்களுக்கும் இதே போல் சலுகை இருக்கிறது. பழைய கார் வாங்கும்போது… பழைய வாகனத்தை வாங்கும்போது, அந்த வாகனத்தின் இன் ஷூரன்ஸ் பாலிஸியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தேதி முடிந்திருந்தால், புதிய பாலிஸி எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய வாகனமாக இருந்தாலும் சரி, பழைய வாகனமாக இருந் தாலும் சரி, தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்து கொடுக்க மாட்டார்கள்.

தொடரும்...............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக