செவ்வாய், 13 மே, 2014

இன்சூரன்ஸ் தொடர்ச்சி..(மூன்றாவது பகுதி)

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 அனைத்திந்தியா சாரதிகள்(ஓட்டுநர்கள்) வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.இந்த பதிவிலிருந்து இன்சூரன்ஸ் பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவிடுகிறோம்.தவறுகள் ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய உதவிட வேண்டுகிறோம்.
இன்சூரன்ஸ் தொடர்ச்சி..(மூன்றாவது பகுதி) 

    தவணையில் பிரீமியம்? 
                 ஆயுள் இன்ஷூரன்ஸ் போல மாதம், காலாண்டு, அரையாண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டும் வசதி மோட்டார் இன்ஷூரன்ஸில் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் பிரீமியம் செலுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு நிறுவனத்துக்கு தவணையில் கடனை அடைத்துக் கொள்ளலாம்.  
          வாகனம் திருடு போனால்..!  
                 வாகனம் திருடு போய்விட்டால் முதலில் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் பாலிஸி எடுத்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டும். காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை, விசாரணை அறிக்கை போன்றவற்றை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கேட்டு வாங்கிக் கொள்ளும். திருட்டு போன வாகனம் கண்டு பிடிக்கப்பட்டு, அதற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டு இருந்தால், அதற்கு கிளைம் உண்டு. வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வாகனத்தின் சந்தை விலை, ஐ.டி.வி-யைப் பொறுத்து இழப்பீடு தருவார்கள். அதாவது, காணாமல் போன வாகனத்தின் மறுவிற்பனை விலைதான் இழப்பீடாகக் கிடைக்கும். இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டதும், வாகனத்தின் பதிவு எண் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் மாற்றப்படும். மேலும், வாகனம் தொடர்பாக உங்களிடம் உள்ள மாற்றுச் சாவி, இதர ஆவணங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டிய தாளில் கடிதம் ஒன்றும் எழுதிக் கொடுக்க வேண்டும். 
               பழைய வாகனத்தை வாங்கி, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உங்கள் பெயருக்கு மாற்றி இருப்பீர்கள். அதே நேரத்தில், இன்ஷூரன்ஸை மாற்ற பலர் தவறி விடுகிறார்கள். இது தவறு. வாகனப் பதிவு மற்றும் இன்ஷூரன்ஸ் இரண்டும் ஒரே பெயர், முகவரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் இழப்பீடு கிடைக்காது. ஆர்.சி புத்தகம் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிஸியில் பெயர் மாற்றிக் கொள்வது மிக மிக அவசியம்! தவறு என்றாலும்..! சாலையில் தவறான பாதையில் சென்று விபத்தில் சிக்கினால் அல்லது சாலை விதியை மீறி (வேண்டும் என்றே இல்லாமல்) விபத்துக்குள்ளானாலும் கிளைம் செய்ய முடியும். அதற்காக, இதையே வழக்கமாகக் கொண்டிருந்தால் உங்களுக்கு அடுத்தமுறை பிரீமியம் தொகை  அதிகரிக்கப்பட்டு விடும்!  
            பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், நேஷனல் இன்ஷூரன்ஸ், ஓரியண்டல் இன்ஷூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. இ.ஆர்.இ.கோ. ஜெனரல் இன்ஷூரன்ஸ் டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்ஷூரன்ஸ், பஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ் இஃப்போ டோக்கியோ ஜெனரல் இன்ஷூ ரன்ஸ் மெடிக்ளைம், தனி நபர் விபத்து பாலிஸியும் அவசியம்! மோட்டார் இன்ஷூரன்ஸில் ஒருங்கிணைந்த பாலிஸியை எடுத்திருக்கும் அதே நேரத்தில், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் சூழ்நிலை வந்தால், அதற்குக் கை கொடுக்கும் மெடிக்ளைம் பாலிஸியை எடுத்துக் கொள்வது அவசியம். இதில், விபத்தின்போது பாதிப்பு ஏற்பட்டால், கிளைம் கொடுக்கும் தனி நபர் விபத்து பாலிஸியும் ஒரு பகுதியாக இருக்கும். அதே நேரத்தில், விபத்தினால் மரணம் அல்லது கை கால் போன்ற உறுப்புகளை இழந்து ஊனமானால் இழப்பீடு கிடைக்கும். தனி நபர் விபத்து பாலிஸியை (Personal Accident Policy) தனியாக எடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது. இந்தப் பாலிஸியை பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில் அளித்து வருகின்றன. இவை, ‘ஜனதா தனிநபர் விபத்து பாலிஸி’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. 
         ‘ஜனதா தனிநபர் விபத்து பாலிஸி’  பாலிஸியை எடுத்திருந்தால் உலகில் எங்கு விபத்து நடந்தாலும் இழப்பீடு உண்டு. இந்த தனி நபர் பாலிஸியில் மூன்று வகைகள் இருக்கின்றன. விபத்தில் இறந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவது ஒரு வகை. 
          மற்றொன்று, விபத்தில் மரணம் மற்றும் அடிபட்டால் இழப்பீடு கிடைக்கும். கடைசியாகச் சொல்லப்பட்ட பாலிஸியில் பிரீமியம் சிறிது அதிகம் என்றாலும், அதுதான் அதிக ஆதாயம் தருவதாக இருக்கும்.          
             மூன்றாம் வகை, விபத்தினால் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக ஊனம் ஏற்பட்டு, அதனால் பணிக்குச் செல்ல முடியவில்லை என்றால், அந்தக் காலகட்டத்தில் வாரம் தோறும் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகத் தரும் பாலிஸி. சுமார் 100 வார காலத்துக்கு இந்த இழப்பீடு கிடைக்கும். இந்த தனி நபர் விபத்து பாலிஸியில் மருத்துவச் செலவு மற்றும் நஷ்டத்துக்கு ஏற்ப இழப்பீடு கொடுக்க மாட்டார்கள். விபத்து ஏற்ப ட்டால் பாலிஸியில் குறிப்பிட்டபடி, இழப்பீட்டுத் தொகையைத் தந்துவிடுவார்கள். தனி நபர் விபத்து இன்ஷூரன்ஸில், பாலிஸி தொகை அவரின் வருமானத்தைப் பொறுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்படும் என்பதால், பாலிஸிதாரர் தன்னால் பிரீமியம் கட்ட முடியும் என்றாலும், அதிகத் தொகைக்கு பாலிஸி எடுக்க முடியாது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தை போல் 5-7 மடங்குக்கு இந்தப் பாலிஸியை எடுத்துக் கொள்ள முடியும். இதை பொதுவாக 14-70 வயதினர் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, 45-50 வயதுக்கு மேல் என்றால், மருத்துவப் பரிசோதனை அறிக்கை தேவைப்படும். ஜனதா பாலிஸியில் அதிகப்பட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குத்தான் பாலிஸி எடுக்கும் நிலை இருக்கிறது. ஆண்டு பிரீமியம் சுமார் 60-75 ரூபாய்தான். பொதுவான தனி நபர் விபத்து பாலிஸியில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஆண்டு பிரீமியம் சுமார் 130-150 ரூபாய்தான். இதில் கூடுதல் தொகைக்கு பாலிஸி எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. பாலிஸிதாரரின் வயது, பணியின் போது அவருக்குள்ள இடர்பாடு போன்றவற்றைப் பொறுத்து பிரீமியம் மாறுபடும். அலுவலத்துக்குள் வேலை பார்ப்பவரைவிட, அடிக்கடி வெளியில் சென்று வருபவருக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். 
   யாரிடம், எப்படி புகார் செய்வது? 
      பொதுவாக, மோட்டார் இன்ஷூரன்ஸில் இழப்பீட்டுத் தொகை குறைவாக வழங்கப்படுவது தொடர்பாகத்தான் அதிக புகார்கள் எழுகின்றன, இன்ஷூரன்ஸ் சம்பந்தமான புகாரை, முதலில் இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்திலுள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் எழுத்து மூலம் கொடுக்க வேண்டும். 10-15 நாட்களில் பதில் கிடைக்கவில்லை அல்லது பதில் திருப்திகரமாக இல்லை என்றால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கோட்டம் அல்லது மண்டல அலுவலகத்திலுள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் புகார் கொடுக்க வேண்டும். அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால், இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மன் என்ற அமைப்பை தொடர்பு கொள்ளலாம். 
        சென்னை முகவரி: Office of the Insurance Ombudsman, Fatima Akhtar Court, 4th Floor, 453 (old 312), Anna Salai, Teynampet, CHENNAI-600 018. Tel.:- 044-24333678/664/668 Fax:- 044-24333664 / Email:-insombud@md4.vsnl.net.in  
                இந்த ஆம்புட்ஸ்மன் அமைப்பு ரூ.20 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட தனி நபர் பாலிஸிகளுக்கான கிளைம் கொடுக்கக் கூடிய வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை யில்லை. தீர்ப்பு பெரும்பாலும் மனிதாபிமான அடிப்படையில் இருக்கும். இந்த அமைப்பு அளிக்கும் தீர்ப்பை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்று நிறைவேற்ற வேண்டும். உங்களுக்கு இங்கும் திருப்தி இல்லை என்றால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதில், நீதிமன்றம் மற்றும் வக்கீல் கட்டணம் இருக்கிறது. வழக்கு நீண்ட காலத்துக்கு இழுக்கும்.  
   எதிலும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படவில்லை என்றால், இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ) பொதுமக்கள் குறை தீர்ப்புப் பிரிவுக்கு எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டும். Insurance Regulatory and Development Authority, 3rd Floor, Parisrama Bhavan, Basheer Bagh, HYDERABAD 500 004. Andhra Pradesh (INDIA ) Ph: (040) 23381100 Fax: (040) 6682 3334. Email:irda@irda.gov.in வாகனத்தின் உரிமையாளர் கடந்த ஆண்டுகளில் இழப்பீடு கோரிய விவரம், உரிமையாளர் மற்றும் ஓட்டுநரின் கண் பார்வைத் திறன் மற்றும் உடல் ஆரோக்கியம், இரவில் வீட்டு காம்பவுண்டுக்குள் அதற்குரிய ஷெ ட்டில் நிறுத்துகிறாரா அல்லது வீட்டு முன்பாக சாலையில் நிறு த்துகிறாரா என்பதை எல்லாம் கவனித்து பிரீமியத் தொகையை நிர்ணயிப்பார்கள்.  

               
               தொடரும்...............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக