வெள்ளி, 16 மே, 2014

ஓட்டுநர்களுக்காக கவிதை-



மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். சாரதிகள் இந்தியா -வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.வரும் 2014 ஜூன் மாதம் 26 ஆம் தேதி
ALL INDIA DRIVERS APPRECIATION DAY - 
அனைத்திந்திய சாரதிகள் தினம்


   சாரதிகளே வாங்க - சத்தியமங்கலத்திலே சங்கமிப்போம்
 ஜூன்மாதம் தாங்க - சாரதிகளே வாங்க
சாலைக்கு ஒருவிழா - ஜனவரி மாதம் வாரவிழா
சாரதிகளுக்கு தனிவிழா - ஜூன் மாதம் தினவிழா
நாட்டுக்காக உழைக்கிறோம் - நமது பெருமை உணர்ந்திடுவோம்.
ஊருக்காக உழைக்கிறோம் - உயர்ந்த மதிப்பை பெற்றிடுவோம்.

சாலைப் பயணமே வாழ்க்கையென்று -சமூகத்தொடர்பை குறைத்திட்டோம்.
சர்வ காலமும் ஓட்டுகிறோம் -  சம்சாரத் தொடர்பும் குறைத்திட்டோம்.
எப்படியோ வாழ்கிறோம்? என்ற நிலையை விட்டுவிட்டு
 இப்படித்தான் வாழ்வோம்! என இனியாவது சிந்திப்போம்.
நமது செக்குமாட்டு வாழ்வதனை, சற்றே திரும்பி பார்த்திடுவோம்
நம்ம சத்தியமங்கலத்திலே சங்கமிப்போம்,  ஜூன்மாதம் சந்திப்போம்

காலை முதல் மாலைவரை ,மாலைமுதல் காலைவரை
சமுதாயத் தேவைகளுக்கு சாலைப் பயணமே அடிப்படை
சாலைப் பயணத்தில் சிக்கல்களோ ஏராளம்
சாரதிகள் எதிர்கொள்ளும் தொல்லைகளும் ஏராளம்

       கப்பலுக்கும் விமானத்திற்கும் தனிவழி
         ரயிலுக்குக்கூட தனிவழி
 சாலைப் பயணத்திற்கோ பொதுவழி
சகிப்பதைத் தவிர வேறு வழி?

  சாலையில் பாதுகாப்பு -
சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு
விபத்தென்று நேர்ந்துவிட்டால்
சாரதிகளுக்கே பொல்லாப்பு

சாரதிகளே சிந்திப்போம்
சத்தியமங்கலத்திலே சந்திப்போம்
பாகுபாடின்றி சேர்ந்திடுவோம்
பொதுப்பிரச்சினையை ஆராய்வோம்

நாட்டிற்கு உயிரோட்டம்
வாகன ஓட்டமே முக்கியம்
பொருட்களும், பயணிகளும் போக வர
பொதுச்சாலையே முக்கியம்
அவசர,அவசியத் தேவைகளுக்கு
அன்றாடத் தேவைகளுக்கு
அனைத்து வாகனங்களையும் ஓட்டும் நாம்
அல்லல்படுவது ஏனோ?
வாகனங்கள் பலவிதம்
ஆட்டோ,கார்,லாரிகளோடு
டெம்போ,டேங்கர்,பேருந்தும் சேர்ந்து
பைக்,ஆம்புலன்ஸ்,அவசரவாகனம் என
வாகனங்கள் பலவிதம் - சாலையில்
செல்லும் வேகமும் பலவிதம்
வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப
சாலைகள் பெருகவில்லையே
சகிப்புத்தன்மை வளர்த்திடுவோம்
சங்கடங்களைத் தவிர்த்திடுவோம்
சாரதிகளே வாங்க- சத்தியிலே சந்திப்போம்
சமுதாயப் பிரச்சினையாகிவிட்ட
சாலைப் பயணச் சிக்கல்களை
சத்தியிலே தொகுத்திடுவோம்
சகலருக்கும் தெரிவிப்போம்
எல்லாப் பணிகளுக்கும் எல்லை உண்டு
எந்த சிக்கலையும் சமாளிக்கலாம்
வாகனம் ஓட்டும் பணியிலே, எல்லை ஏதும் இல்லையே
எல்லையில்லாப் பணியிலே, தொல்லை மிகுந்த பணியிலே
எந்த சிக்கலை சமாளிப்பது?

உலகமே உறங்கும்போது விழித்திருந்து ஓட்டுகிறோம்
உண்டு உண்டு எதிர்காலம்! நமக்கும் உண்டு என்றெண்ணி
ஒன்று கூடுவோம் சாரதிகளே நம்ம
சத்தியமங்கலத்திற்கு வாங்க .

        சிபிசாரதி.......(சி.பரமேஸ்வரன் - ஓட்டுநர்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக