புதன், 30 ஏப்ரல், 2014

ALL INDIA DRIVERS APPRECIATION DAY-JUNE 26,2014 SATHYAMANGALAM.

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.சாரதிகள் இந்தியா வலைப் பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.
 சாலைக்கு ஒருவிழா - ஜனவரி மாதத்தில் வாரவிழா,
சாரதிகளுக்கு தனிவிழா - ஜூன் மாதத்தில் தினவிழா,
சத்தியமங்கலத்தில் திருவிழா...............
 அனைத்து வகை வாகன ஓட்டுநர்களுக்கான மதிப்புயர்வு விழா.
                                                     அழைப்பிதழ்.................




அனைவரையும் அன்புடன் வரவேற்கும் 
   அன்பன்....
பரமேஸ்வரன்.சி.



வெள்ளி, 25 ஏப்ரல், 2014

ASHOK LEYLAND OVER DRIVING பயிற்சி.

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.சாரதிகள் இந்தியா வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறோம்.
             இன்று ( 25 - 04 - 2014 ) ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சித்தோடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் அசோக் லேலண்டு நிறுவனத்தார் அசோக் லேலண்டு ஓவர் டிரைவ் பயிற்சி கொடுத்தனர்.திரு.சேதுமாதவராஜ் அவர்கள் ASHOK LEYLAND SERVICE MANAGER மேற்பார்வையில் திரு.K.செல்வ கணேசன் அவர்கள் ASHOK LEYLAND DRIVING INSTRUCTOR அசோக் லேலண்டு கனரக வாகனத்தில்Barath Stage என்னும்  BS III - OVER DRIVING GEAR BOX  பற்றி பயிற்சி கொடுத்தார்.அப்போது பேருந்தின் முதல் கியர் மூவிங் கியர் என்றும்,மூன்று மற்றும் நான்காவதுகியர் புல்லிங் கியர் என்றும் ஐந்தாவது மற்றும் ஆறாவது கியர் ரன்னிங் கியர் என்றும் தெளிவாக விளக்கினார்.புல்லிங் கியரில் வாகனத்தை இயக்க 15 ஆர்.பி.எம் . இஞ்சின் வேகம் மட்டும் போதும் .ரன்னிங் கியரில் இயக்க நாற்பது கி.மீ.வேகத்திற்கு மேல் ஓட்ட வேண்டும்.அப்போது  ரேசிங் பாயிண்டிலிருந்து அரை செ.மீ.அளவு மட்டும்ஆசிலேட்டர் கொடுத்து இயக்க வேண்டும் என்றார்.
               முதல் நான்கு கியர்களையும் கையை எடுக்காமல் விரைவாக போட வேண்டும்.நாற்பது கி.மீ.வேகத்திற்கு பிறகு ரன்னிங் கியரில் இயக்கினால் டீசல் மைலேஜ் கிடைக்கும் என்றார்.இஞ்சின் பவரை ஆஸிலேட்டர் வழியாக கொடுத்து பவர்ஸ்ட்ரோக் உற்பத்தி ஆகிறது.அதனால் டீசல் செலவு ஆகிறது.இறக்கத்தில் வாகனம் செல்லும்போது உந்துவிசை காரணமாக டயரிலிருந்து பவர் இஞ்சினை சுழற்றுவதால் டீசல் பம்ப் லாக் ஆகி டீசலை கட்டுப்படுத்திவிடும்.அப்போது பவர் ஸ்ட்ரோக் கொடுக்காமல் காற்று மட்டும் சுழற்சி ஆகும். என்றார்.

வியாழன், 24 ஏப்ரல், 2014

சாரதிகள் தினவிழா- கவிதை.

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். சாரதிகள் இந்தியா -வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.வரும் 2014 ஜூன் மாதம் கடைசி வாரத்தில் அனைத்திந்திய  அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கு அதாவது சாரதிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக  
ALL INDIA DRIVERS APPRECIATION DAY - 
அனைத்திந்திய சாரதிகள் தினம் கொண்டாட உள்ளோம்.
அதற்கான கவிதை,,,,,இந்த
கவிதையில் காணப் பெறும் இலக்கணப்பிழை,சந்திப்பிழை,சொற் பிழைகளை சுட்டிக்காட்டி திருத்திட உதவுமாறு தமிழ்ச்சான்றோர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.


   சாரதிகளே வாங்க - சத்தியமங்கலத்திலே சங்கமிப்போம்
 ஜூன்மாதம் தாங்க - சாரதிகளே வாங்க
சாலைக்கு ஒருவிழா - ஜனவரி மாதம் வாரவிழா
சாரதிகளுக்கு தனிவிழா - ஜூன் மாதம் தினவிழா
நாட்டுக்காக உழைக்கிறோம் - நமது பெருமை உணர்ந்திடுவோம்.
ஊருக்காக உழைக்கிறோம் - உயர்ந்த மதிப்பை பெற்றிடுவோம்.

சாலைப் பயணமே வாழ்க்கையென்று -சமூகத்தொடர்பை குறைத்திட்டோம்.
சர்வ காலமும் ஓட்டுகிறோம் -  சம்சாரத் தொடர்பும் குறைத்திட்டோம்.
எப்படியோ வாழ்கிறோம்? என்ற நிலையை விட்டுவிட்டு
 இப்படித்தான் வாழ்வோம்! என இனியாவது சிந்திப்போம்.
நமது செக்குமாட்டு வாழ்வதனை, சற்றே திரும்பி பார்த்திடுவோம்
நம்ம சத்தியமங்கலத்திலே சங்கமிப்போம்,  ஜூன்மாதம் சந்திப்போம்

காலை முதல் மாலைவரை ,மாலைமுதல் காலைவரை
சமுதாயத் தேவைகளுக்கு சாலைப் பயணமே அடிப்படை
சாலைப் பயணத்தில் சிக்கல்களோ ஏராளம்
சாரதிகள் எதிர்கொள்ளும் தொல்லைகளும் ஏராளம்

       கப்பலுக்கும் விமானத்திற்கும் தனிவழி
         ரயிலுக்குக்கூட தனிவழி
 சாலைப் பயணத்திற்கோ பொதுவழி
சகிப்பதைத் தவிர வேறு வழி?

  சாலையில் பாதுகாப்பு -
சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு
விபத்தென்று நேர்ந்துவிட்டால்
சாரதிகளுக்கே பொல்லாப்பு

சாரதிகளே சிந்திப்போம்
சத்தியமங்கலத்திலே சந்திப்போம்
பாகுபாடின்றி சேர்ந்திடுவோம்
பொதுப்பிரச்சினையை ஆராய்வோம்

நாட்டிற்கு உயிரோட்டம்
வாகன ஓட்டமே முக்கியம்
பொருட்களும், பயணிகளும் போக வர
பொதுச்சாலையே முக்கியம்
அவசர,அவசியத் தேவைகளுக்கு
அன்றாடத் தேவைகளுக்கு
அனைத்து வாகனங்களையும் ஓட்டும் நாம்
அல்லல்படுவது ஏனோ?
வாகனங்கள் பலவிதம்
ஆட்டோ,கார்,லாரிகளோடு
டெம்போ,டேங்கர்,பேருந்தும் சேர்ந்து
பைக்,ஆம்புலன்ஸ்,அவசரவாகனம் என
வாகனங்கள் பலவிதம் - சாலையில்
செல்லும் வேகமும் பலவிதம்
வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப
சாலைகள் பெருகவில்லையே
சகிப்புத்தன்மை வளர்த்திடுவோம்
சங்கடங்களைத் தவிர்த்திடுவோம்
சாரதிகளே வாங்க- சத்தியிலே சந்திப்போம்
சமுதாயப் பிரச்சினையாகிவிட்ட
சாலைப் பயணச் சிக்கல்களை
சத்தியிலே தொகுத்திடுவோம்
சகலருக்கும் தெரிவிப்போம்
எல்லாப் பணிகளுக்கும் எல்லை உண்டு
எந்த சிக்கலையும் சமாளிக்கலாம்
வாகனம் ஓட்டும் பணியிலே, எல்லை ஏதும் இல்லையே
எல்லையில்லாப் பணியிலே, தொல்லை மிகுந்த பணியிலே
எந்த சிக்கலை சமாளிப்பது?

உலகமே உறங்கும்போது விழித்திருந்து ஓட்டுகிறோம்
உண்டு உண்டு எதிர்காலம் நமக்கும் உண்டு என்றெண்ணி
ஒன்று கூடுவோம் சாரதிகளே நம்ம
சத்தியமங்கலத்திற்கு வாங்க .

        சிபிசாரதி.......(சி.பரமேஸ்வரன் - ஓட்டுநர்)



புதன், 23 ஏப்ரல், 2014

ALL IDIA DRIVERS APPRECIATIO DAY-SATHYAMAGALAM-ERODE Dt.

    

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வருகிற ஜூலை மாதம்இ2014 அன்று ஓட்டுநர்களுக்கான திருவிழா..அதற்கான இலச்சினை LOGO இதில் மாற்றம் செய்யலாமா? இதுவே போதுமானதா? ஆலோசனை கூறுங்கள்.....


India’s first electric bus



India's first electric bus launched in Bangalore


BMTC unveils India’s first electric bus

Express News Service | Bangalore | February 28, 2014 4:55 am




bang 
The emission-free electric bus costs Rs 2.7 crore. express

Summary

The BMTC will use the electric bus on a trial basis for three months and, based on the success of the operations, it will be expanding the services.
Related
The Bangalore Metropolitan Transport Corporation (BMTC) on Thursday unveiled the country’s first electric bus in a “cleaner” attempt to ease its mass transport requirements.
  
to help us personalise your reading experience.
The 12-metre-long air-conditioned ‘e-bus’ can accommodate 32 people, including the driver and a wheelchair occupant, and can travel 250 km on a single charge of four to six hours. The BMTC will use the electric bus on a trial basis for three months and, based on the success of the operations, it will be expanding the services.
Manufactured by BYD, a Chinese coach company, the emission-free bus costs Rs 2.7 crore against Rs 1.3 crore to Rs 1.7 crore for a Volvo A/C bus. “A low running cost of Rs 7 per km — as compared to Rs 18 per km for a Volvo A/C bus — and easy maintenance are expected to drastically reduce the cost per passenger to BMTC,” said Vishwas Shetty, the director of Utopia Automation and Control, which facilitated BMTC’s acquisition of the bus.  BMTC Managing Director Anjum Parwez said: “Three months is sufficient time to study the feasibility of the vehicle on our road. We will take feedback from passengers and crew before deciding on acquiring it as part of our fleet.”  For the safety of passengers, there are two rooftop escape hatches and all window panes are made of breakable glasses in case of emergency. BMTC has already shortlisted and trained eight Volvo bus drivers.

சாரதிகளின் வாழ்க்கை-01

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.சாரதிகளின் வாழ்க்கையின் ஒரு பகுதி ..பாருங்க.






கோவை பைபாஸ் ரோட்டில் லாரி டிரைவரை கொன்று பணம்-செல்போன் கொள்ளை: முகமூடி கும்பல் அட்டூழியம்
கோவை பைபாஸ் ரோட்டில் லாரி டிரைவரை கொன்று பணம்-செல்போன் கொள்ளை: முகமூடி கும்பல் அட்டூழியம்
இருகூர், ஜூலை. 17-
 
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து முந்திரி பருப்பு ஏற்றிக்கொண்டு கொல்கத்தா செல்வதற்காக லாரி ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை ஈரோட்டை சேர்ந்த டிரைவர் கருப்புசாமி (42) என்பவர் ஓட்டி வந்தார்.
 
உதவி டிரைவராக குணசேகரன் என்பவர் இருந்தார். லாரி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கோவை பைபாஸ் ரோடு பட்டணம் பைபாஸ் என்ற இடத்தில் வரும்போது சிறுநீர் கழிப்பதற்காக டிரைவர் கருப்புசாமி லாரியை நிறுத்தினார். சிறுநீர் கழித்துவிட்டு லாரியின் டயர்களை கருப்புசாமி சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது காட்டு பகுதியில் இருந்து முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கும்பல் உதவி டிரைவர் குணசேகரனின் கை, கால்களை கட்டி அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளி விட்டனர்.
 
பின்னர் கருப்புசாமியிடம் சென்று லாரியில் இருக்கும் பணத்தை தரும்படி கூறினர். ஆனால் அவர் மறுத்ததாக தெரிகிறது. உடனே அந்த கும்பல் கருப்புசாமியை சரமாரியாக கத்தியால் குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் டிரைவர் கருப்புசாமி மயங்கினார். பின்னர் லாரியில் மறைத்து வைத்திருந்த ரூ. 45 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கருப்புசாமியிடம் இருந்த 2 செல்போன்களை கொள்ளையடித்தனர்.
 
பின்னர் பள்ளத்தில் கிடந்த டிரைவர் குணசேகரனை அவிழ்த்து விட்டு கருப்புசாமியை குத்திவிட்டதாகவும் அவரை காப்பாற்றிக்கொள் என்று கூறி விட்டு 5 பேர் கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் ஓடிவந்து கருப்பசாமியை பார்த்தார். அங்கு கருப்புசாமி ரத்த வெள்ளத்தில் பரிதாபமான முறையில் இறந்து கிடந்தார்,
 
இது குறித்து குணசேகரன் சூலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு உமா, டி.எஸ்.பி. பாலாஜி, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கொன்று பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை தேடிவருகின்றனர். கோவையில் லாரி டிரைவரை கொன்று கொள்ளையடித்து சென்ற சம்பவம் லாரி டிரைவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 21 ஏப்ரல், 2014

கையிருப்பு அவசியம்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                                கையிருப்பு அவசியம்-தின மணி நாளிதழ் பதிப்பு......
First Published : 14 April 2014 02:59 AM IST
                         ஓரு பத்து நாள் முன்பு என் சினேகிதரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். மூச்சுத் திணறலுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்; தொடர்ந்து இரண்டு நாளாகச் சிகிச்சை பெறுகிறார். துணைக்கு மனைவி இருந்தார்.
நான் போனபோது, அவர் அசாத்திய டென்ஷனில் இருந்தார். மருத்துவக் காப்பீட்டுக்கான விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு, தொகை வரவில்லை; அதே சமயம் நிராகரிக்கப்படவுமில்லை. பிற்பகலில் வீட்டுக்குப் போய் விடலாமென்று நிபுணர் தெரிவித்தாகிவிட்டது. பையன் தாயாரின் காசோலையை எடுத்துக் கொண்டு (அதன் அட்டை சேதமாகி, மாற்று அட்டைக்காகக் காத்திருக்கிறார்) காலை ஒன்பது மணிக்கு வங்கிக்குச் சென்றிருக்கிறான். பத்து மணி ஆகியும் வரக் காணோம்!
கைபேசியில் பேசப் பேச, சினேகிதர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளானார். வங்கியில் கணினியைத் திறக்க முடியவில்லையாம்; செர்வர் பிராப்ளமாம்!
எப்படியோ பையன் மன்றாடிக் கேட்டு, தொகையுடன் (ரூ.10,000) திரும்புகையில் தாமதமாயிற்று. நண்பர் "டிஸ்சார்ஜ்' ஆகும் நேரத்துக்கு அரை மணி முன்னர்தான், காப்பீட்டு நிறுவனமும் ஒப்புதல் அளித்தது வேறு விஷயம்.
இதேபோன்ற அனுபவம் ஒன்று, என் நெருங்கிய உறவினருக்கு ஏற்பட்டது. அது சற்று பெரிய ஆஸ்பத்திரி. ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பழக்கமிருந்தும், முன்பணமாகத் தொகை கேட்டார்கள். கடன் அட்டையை ஏற்கவும் செய்தார்கள். ஆனால் அதற்கான "பற்று' சில நாளிலேயே வந்து விடக்கூடிய சூழ்நிலை. இங்கும் நோயாளி ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறும் சமயத்தில்தான் காப்பீட்டுத் தொகை கிடைத்தது (முதலில் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில், முன் பணம் ஏதும் கேட்கவில்லை; ஆனால் எந்த அட்டையையும் அவர்கள் பெற்றுக் கொள்வது கிடையாது).
மேற்படி, இரண்டு நிகழ்வுகளும் ஓர் உண்மையை வெளிப்படுத்தின. வீட்டில் யாருக்கு, எப்போது, என்ன வியாதி வரும் என்பதை யாரும் கணிக்க இயலாது. முதியோர்களும், குழந்தைகளும் இருக்கும் பட்சத்தில் இதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டால், கிட்டத்தட்ட "பிணைக் கைதி' போலத்தான். "ஸி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்ப்போம்'. "எதற்கும் எக்ஸ்ரே எடுக்கலாம்' - போன்ற நிலைமைக்குத் தயாராக இருக்க வேண்டும்.
சில ஆஸ்பத்திரிகளில், இவற்றுக்கு வேறு இடம் போகச் சொல்லுவார்கள். அங்கு பணத்தைத் தனியாகச் செலுத்த வேண்டி வரும். உடனடித் தேவையை எப்படிச் சமாளிப்பது?
நடைமுறையில், ஓர் அவசரம் என்று வரும்போதுதான், விபரீதமாக வங்கிகளும் "ஒத்துழையாமை இயக்கத்தில்' பங்கேற்பது போலச் செயல்படுகின்றன. நோயாளியைத் தனியே விட்டுவிட்டு, துணை இருப்பவர் எப்படிப் போவது? என்னதான் டாக்டர் நர்ஸ் எல்லாரும் இருந்தாலும், ஓர் அச்ச உணர்வு நோயாளியைச் சூழ்ந்து கொண்டேயிருக்குமே?
என் சொந்த அனுபவம் வேறு "கதை', போன வாரம் தபால் ஆபீசில் முதிர்வடைந்த என்.எஸ்.ஸி. செர்டிபிகேட்டின் தொகையை பெற்று வரப் போயிருந்தேன். இத்தனைக்கும் ஒரு வார முன்பே, என்னென்ன கொண்டு வர வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தேன் (டஅச அட்டை; முகவரிச் சான்றிதழ்). ஆட்டோவில் ஏறி அங்கு சென்றால், "மன்னிக்கவும், கவுன்ட்டர்கள் வேலை செய்யவில்லை. செர்வர் கோளாறு' என்ற பலகை வரவேற்றது. மனம் நொந்து போனேன். நல்ல காலம்; போஸ்ட் மாஸ்டர், என் நிலைமையைப் புரிந்து கொண்டு செர்டிபிகேட்டில் கையெழுத்து பெற்றுக் கொண்டார் - தேதி போடாது.
"பழுது பார்க்கிறார்கள். இரண்டு மணிக்குள் சரியானால், வீட்டுக்கே பணம் கொடுத்தனுப்புகிறேன் என்று ஆறுதல் சொன்னார். உள்ளபடிக்கே பிற்பகல் எனக்கு தொலைபேசியில் தெரிவித்து, ஓர் ஊழியரிடம் தொகையை இல்லத்துக்கே கொடுத்தனுப்பினார்.
பழைய காலம் மாதிரி இல்லை. வசதிகள் பெருகி விட்டன என்பதெல்லாம் உண்மையே, ஆனால் எல்லாவற்றுக்கும் "விலை' உள்ளது. ஆஸ்பத்திரியில் பரிசோதனைகள் செய்யப்படும் போதுதான், அதன் "விலை' புரிகிறது. அந்த நேரம் பார்த்து, வங்கியில் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. ஏற்கெனவே உடற்கோளாறு; "டேக் இட் ஈஸி' என்று பாடவா முடியும்?
40 வருடத்துக்கு முன், எல்லா வங்கிகளும் தொடர் வேலைநிறுத்தம் செய்தபோது கிராமவாசி ஒருவர் மனைவியிடம், அலமாரியிலிருந்து பணம் எடுப்பது போல் கார்ட்டூன், ஒரு வாரப் பத்திரிகையில் போடப்பட்டிருந்தது, "இதுதான் செளகரியம்' என்று சொல்வார் அவர் (அப்போது மருத்துவச் செலவுகள் இந்த அளவு இல்லை). அதே போன்ற சூழ்நிலைதான் இப்போதும் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. ஓர் அவசரத் தேவைக்கு குறைந்தது ரூ.30,000மாவது வீட்டில் வைத்துக் கொள்வது முக்கியம் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஓட்டுனர்களுக்கு தேவையான ஓய்வு வேண்டும்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                  புள்ளிவிவரங்களில் மறையும் சோகங்கள்-
                                தின மணி நாளிதழ் பதிவு (14-04-2014)
First Published : 14 April 2014 02:59 AM IST

                         கடந்த 10 வருடங்களாக தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிகமான வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்றும் கடந்த வருடம் மட்டிலும் 16,175 பேர் விபத்தில் இறந்துள்ளார்கள், அதாவது, ஒரு நாளில் 44 பேர் விபத்தில் இறக்கிறார்கள் என்றும் செய்தி படித்தேன். 
          
                     இந்தப் புள்ளிவிவரம் வயிற்றைக் கலக்குகிறது.
அது வெறும் எண்ணிக்கை அல்ல. ஒவ்வொரு விபத்தும் ஒரு குடும்பத்தை நிலை குலைய வைத்திருக்கும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல், "ஒவ்வொரு வழக்குக்கட்டிலும் ஒரு வாழ்க்கை கட்டப்பட்டுள்ளது என்று நினைவு வைத்துக்கொண்டால் தவறு நடக்காது' என்று கூறுவார். இது விபத்துகளுக்கும் பொருந்தும்.

                        வாகன விபத்து, ரயில் விபத்து, சாதிக்கலவரங்கள், குறிப்பிட்ட சமூகத்தினர் மேல் வன்முறை, தீவிரவாதத்தினால் நடக்கும் வன்முறை. அரசியல் தலைவருக்கு தன் விசுவாசத்தைகாட்ட வாகனங்களை எரித்தல், ஒரு கிராமம் முழுவதையும் வேரோடு பிய்த்து போடுதல் - இவ்வாறு எவ்வளவோ காரணங்கள். 

                  ஒரு மரணத்தின் காரணம் எதுவாயின் என்ன? போனது ஒரு மனித உயிர்; கலைந்தது ஒரு குடும்பக்கூடு. இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற பின் உயிர் இழந்தவருடைய குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கப்படும். இதுவும் ஒரு அர்த்தமில்லா சடங்காக நீர்த்துப்
போனது.

                  யாருடைய செய்கையால் அல்லது யாருடைய அலட்சியத்தால் மரணங்கள் சம்பவித்ததோ, அவர் இறந்து போனவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவேண்டும்; மன்னிப்புக் கோர வேண்டும். இறப்பவரும் நம் கூடப்பிறந்தவரே. அவர் வீட்டின் அழுகை ஓலம் நம் காதில் அறைய வேண்டும். அப்பொழுதுதான் இன்னொரு முறை உயிர்சேதமும் ஊழியாட்டமும் நடக்காது.

                     லட்சக்கணக்கில் விலை கொடுத்து ஒரு கார் வாங்கி அதை அலட்சியமாக ஓட்டியதால், நம் சுதந்திரத் திருநாட்டில் ஒரு கூரைகூட இல்லாமல் உறங்கும் இந்நாட்டு மன்னர்கள் மரிக்கிறார்கள். அவர்கள் வெறும் புள்ளிவிவரமா? 

    புள்ளிவிவரங்கள் வேண்டுமென்றால் அதிகப்படியான விபத்துகள் அரசு போக்குவரத்து பேருந்துகளில் தான் ஏற்படுகின்றன என்பதும் ஒரு விவரம்தான்.

            பாதசாரிகளுக்கு பாதையோரங்கள் மீட்கப்படவேண்டும் என்று பாடுபட்ட ஒரு இளம் பெண் சில வாரங்களுக்குமுன் பேருந்து மோதி பெங்களூரில் உயிர் நீத்தார். 40 வயதுகூட ஆகவில்லை. அவருடன் அவர் கனவுகளும் போயிற்று. அவரும் புள்ளிவிவரங்களில் ஒன்றானார். நமக்கு இது ஒரு செய்தி அவ்வளவே. அவருடைய குடும்பத்திற்கு ஆறாத துயரம்.

           நம் நாட்டில் உள்ளதற்குள் மலிவு மனித உயிர்தான். 
                            ஆகையால்தான் நமக்கு ஒரே வேகம், ஒரே அலட்சியம். சாலை விதி மீறல் நம் பிறப்புரிமையோ என்று தோன்றுகிறது.

                     வெளிநாட்டிற்கு சென்றால் நள்ளிரவில் கூட சிவப்பு விளக்கிற்கு மதிப்புத் தருகிறார்கள். பச்சை வந்தால்தான் வண்டி கிளம்பும். இங்கு நம் மூக்கு நுழைந்தால் போதும் வண்டியை நுழைக்கலாம். சிவப்பு மாறி பச்சை வரும் முன்னே பின்னாலிருக்கும் ஓட்டுனர்கள் ஒலியை கர்ணகடூரமாக எழுப்புவார்கள். 
            என்ன செய்யப் போகிறோம் ஐந்துநொடி முன்னே சென்று?

                     நியூயார்க் நகரவாசிகளுக்கு வேலை வெட்டி இல்லையா? ஆகையால்தான் அவர்கள் சாலை விதி காக்கிறார்களா? நியூயார்க் நகரம், லண்டன், சிங்கப்பூர், இன்னும் பூலோகத்தில் இருக்கும் எல்லா நாட்டிலும் ஓரளவுக்கு சாலை விதி ஒழுங்கு இருக்கிறது. நாம் மட்டும்தான் கடமையில் கண்ணாக இருக்கிறோம், ஆகவே பறக்கிறோம், இல்லை பறந்து விபத்தில் வீழ்கிறோம் அல்லது மற்றவரை வீழ்த்துகிறோம்.

                   பல வருடங்களுக்கு முன் வழக்காகிப் போன ஒரு விபத்து. 
                             ஒரு குடும்பம். அதை சேர்ந்த 10-15 பேர், அவர்கள் வீட்டு பிள்ளைக்கு பெண் பார்க்க ஒரு வேனில் செல்கிறார்கள். பேருந்து மோதி பலர் இறக்கிறார்கள். எட்டு வயதுப் பையன் மண்டையில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டு, என்றும் எட்டு வயது சிறுவனாக இருக்கிறான்.
யாருக்காக பெண் பார்க்க சென்றார்களோ அவர் இன்று வரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. தன் அக்காவையும் அண்ணிகளையும நிராதரவாக ஆக்கக்கூடாது என்று. ஏனென்றால், விபத்தில் அக்கா புருஷனும் சகோதரர்களும் மாண்டார்கள். 
                  எந்தக் காப்பீட்டுக் கழகம் இந்தக் கொடுமைக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கும்? எந்த நீதிமன்றத்தால் இந்த இழப்பை எடை போடமுடியும்? இந்த விபத்தும் எண்ணிக்கையில் ஒன்றுதான்.


                        இன்னொரு விபத்து. 
                        நல்ல வேலையில் கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்தவர் இன்று சக்கரவண்டியில் நடைப்பிணமாக தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள இயலாதவராகிவிட்டார். அந்த விபத்திற்கு எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கலாம்? எந்த ஓட்டுனரின் செயலால் இந்த கோரம் நிகழ்ந்ததோ அவர் அந்த குடும்பத்திற்கு காலம் முழுதும் உழைக்க வேண்டும் என்று சொல்லலாமா? அப்படி ஒரு திரைப்படம்கூட வந்தது என்று நினைக்கிறேன்.

                 ஒரு நொடியில் ஏற்படும் கவனக்குறைவினால், கட்டுப்பாடில்லாத வேகத்தினால், குடிபோதையில் ஓட்டுவதனால் விபத்துகள் நிகழ்கின்றன. இது அனைத்தும் தவிர்க்க கூடிய தவறுகள். இந்த தவறுகள் நேர்ந்ததால் எவ்வளவு பேருடைய வாழ்க்கை தடம் புரண்டு போகின்றது?

              ஒரு முறை ஒரு சாலை விபத்து பற்றிய கருத்தரங்கத்தில் ஒரு கருத்து முன்னே வைக்கப்பட்டது. 
                 போக்குவரத்து பேருந்துகளில் ஓட்டுனரின் முன்னே அவர் மனைவி குழந்தைகளின் புகைப்படத்தை வைக்கவேண்டும் என்று. அப்பொழுதாவது அவர் கவனத்துடன் ஓட்டுவார் என்ற நம்பிக்கை. 

       ஆனால் ஒன்று சொல்லவேண்டும். 
          
                 ஓட்டுனர்களுக்கு தேவையான ஓய்வு வேண்டும்.
ஒரு ஷிப்டுக்கும் இன்னொன்றுக்கும் இடையே போதிய இடைவெளி இருக்கவேண்டும். 
                 அவர்களுக்கு மன அழுத்தம் போன்ற நோய் உள்ளதா என்று கவனிக்கவேண்டும். 
             ஓட்டுனர்களும் மனிதர்கள்தான்; இயந்திரங்கள் அல்ல. அவர்களுடைய கைகளில் பல உயிர்கள் ஒப்படைக்கப்படுகின்றன. 
       இதை     அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

                    அதேபோல, நம் மாணவ மணிகள் பேருந்தின் கூரையின் மேல் கொண்டாட்டம் போடாமல் இருக்க வேண்டும். அவர்கள் பேருந்தின் பிடிகம்பியில் கொத்து திராட்சை மாதிரி தொங்காமல் இருக்க வேண்டும். அதற்கு அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். 

        இருசக்கர வண்டிகளில் இருவர் போகலாம் அல்லது அதிகபட்சம் மூவர், அவ்வளவே. 
             அந்த வண்டியில் ஒரு குடும்பமே ஏறி பயணம் செய்யாமல் இருக்க
வேண்டும்.

               ஓட்டுனர் உரிமத்தை நன்கு பரீட்சித்தபின்தான் வழங்குதல் வேண்டும். முதலில் நாம் -
நம் உயிர் விலைமதிக்க முடியாத ஒன்று 
                     என்பதை புரிந்து நடக்க வேண்டும்.
நம் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இப்படி தரக்குறைவான பொருள்களைக் கொண்டு மோசமான தளத்தை உருவாக்குபவர்களை என்ன செய்யலாம்?
சாலை விதிகளை இளமையில் கற்பித்தல் வேண்டும். சாலை விதிகளை மீறுபவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும்; விரைவாகவும் வழங்கப்படவேண்டும்.
காவல் துறையின் கண்காணிப்பு சீராகவும் நேராகவும் இருக்க வேண்டும். விபத்து நடந்ததும் பொன்னான நேரத்தை இழக்காமல் மருத்துவ உதவி தர வேண்டும். விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவரின் குடும்பத்தினருக்கும் உளவியல் ரீதியாக அறிவுரை வழங்க ஒவ்வொரு மருத்துவ மனையிலும் ஒரு பிரத்யேக பிரிவு இருக்க வேண்டும்.

                      காப்பீட்டு கழகங்களும் அரசு போக்குவரத்துக் கழகங்களும் நட்ட ஈடு வழக்குகளை மனித நேயத்துடன் அணுகவேண்டும். வழக்குரைஞர்களும் இந்த ஒவ்வொரு வழக்கும் எரிகிற வீடு என்று நினைவில் வைக்க வேண்டும். இதில் ஆதாயம் தேடக்கூடாது. நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விரைவாக ஆனால் கவனமாக ஆராய்ந்து தீர்ப்பை அளிக்கவேண்டும்.

                     விபத்தில் தந்தை இறந்தபோது இரண்டே வயதாக இருந்த சிறுமி கல்லூரி மாணவி ஆகும் வரை வழக்கு நிலுவையில் இருந்தால்? அந்த தேக்க நிலை மாற
வேண்டும்.
                         சாலையோரங்கள் அகலமாக ஆக்கிரமிப்பு இல்லாமல் பாதசாரிகள் நடக்க வசதியாக இருக்க வேண்டும்.
                                ஒவ்வொருவரும் வண்டியை ஓட்டும் பொழுது சாலைக்கு தானே ஏகாதிபத்திய அரசன் என்று எண்ணாமல் கவனமாக ஓட்டவேண்டும். 
            வள்ளலார் போல என் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. என் கனவு மெய்ப்படுமா?

                             கால் போய், கண் போய், உயிர் போய், மகள் போய், தாய் போய், கணவன் போய் என்று எவ்வளவு இழப்புகள் இந்த விபத்து நட்ட ஈடு வழக்குகளில்? இழந்த அன்புக்கும் பாசத்துக்கும் அரவணைப்புக்கும் என்ன தொகை என்று கூட கணக்கு போடவேண்டும். இதை எப்படி அளவிடுவது?
இப்படித்தான் ஆழமான சோகங்கள் எண்களிலும் புள்ளிவிவரங்களிலும் காணாமல் போகின்றன.

பேருந்துக்குள் வைத்து சிறுமி


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

பேருந்துக்குள் வைத்து சிறுமி பலாத்காரம்: 5 பேர் கொண்ட கொடூர கும்பல் வெறிச்செயல்

First Published : 21 April 2014 02:56 PM IST
  • புகைப்படங்கள்
           மத்திய பிரதேசத்தில்; பேருந்துக்குள் வைத்து தலித் சிறுமி 5 பேர் கொண்ட கொடூர கும்பலால்  பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசம் சிங்குரல்லி மாவட்டத்தில் சித்திக் பகுதியில் தலித் சிறுமி ஒருவர் தனது உறவினார் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு  ஒருபேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சித்திக் பகுதியில் இறங்கிவிடுவதாக கூறி பேருந்தில் இருந்தவர்கள் சிறுமியை ஏறுமாறு கூறினர். இதனையடுத்து சிறுமி பேருந்தில் ஏறினார்.
அந்த பேருந்தில்  ஒரு டிரைவர் 2 கிளினர் உள்பட 5 பேர் இருந்தனர். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பேருந்தில் இருந்த 5 பேரும் சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறமி அலறியுள்ளார். அப்போதுஅந்த கும்பல், சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக பேருந்தின் ஜன்ன்ல்களைமூடிவிட்டு பேருந்தை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றனர்.
 அங்கு 5 பேரும் சிறுமியை மாறிமாறி பலாத்காரம் செய்துள்ளனர்.. பின்னர் சாலையில் தூக்கிவிசிவிட்டு தப்பிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த காயங்களுடன் இருந்த சிறுமியை அருகே இருந்த நல்கதானி கிராமத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைதொடர்ந்துபோலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்  அநத் பேருந்து உள்ளூர் வியாபரி ஒருவரின் திருமண வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. தற்போது குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர் . மேலும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சனி, 19 ஏப்ரல், 2014

பல்வேறு ஊடகங்களின் செய்திகள்....

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். all drivers india  வலைப் பக்கத்தில் சாலைப் போக்குவரத்தும்,நிகழ்வுகளும் பற்றி   இதுவரை பல பதிவுகளாக  “ தின மணி நாளிதழ், தி இந்து தமிழ் நாளிதழ் , தினகரன் நாளிதழ், தினத்தந்தி நாளிதழ், வினவு செய்திகள் என பல்வேறு ஊடகங்களின் செய்திகளை படித்து உணர்ந்தோம்.




       போக்குவரத்துக் கழக அதிகாரிகளே!!! இஃது உங்கள் கவனத்திற்கு.

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்துக்குள் திடீரென எஞ்சின் அருகிலிருந்து புகைக் கிளம்பியது; ஓட்டுநர் வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு பயணிகளை இறங்கிவிடுமாறு எச்சரிக்கிறார். 36 பயணிகள் தங்கள் உயிர்களைக் கையில் பிடித்தபடி அலறியடித்து ஓடி தப்பிக்கின்றனர். சேலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென புகைக் கிளம்புகிறது; ஓட்டுநர் வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு பயணிகளை இறங்கிவிடுமாறு எச்சரிக்கிறார். 38 பயணிகள் வண்டியைவிட்டு இறங்கியோடி தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்கின்றனர். இவ்விரு அரசுப்பேருந்துகளும் பயணிகள் இறங்கிய அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே முற்றிலுமாக தீ ஜுவாலைக்கு இரையாகி எரிந்துபோகின்றன. ஒரே வாரத்திற்குள் இரு பேருந்துகள் தீப்பிடிப்புச் செய்திகள்….. நாளிதழ்களைப் புரட்டினாலும் வானொலியைத் திறந்தாலும், தொலைக்காட்சியினைப் பார்வையிட்டாலும் இணைய தளத்தைத் திறந்தாலும் அரசுப் பேருந்துகள் எரிந்தன,முற்றிலும் எரிந்து நாசமாகின என்ற செய்திகள் சற்றே நம்மைச் சிந்திக்கச் செய்கின்றன.அரசுப் பேருந்துகள் பாதுகாப்பானவை என்ற நிலை தடம் தெரியாமல் சென்றுகொண்டிருக்கின்றனவோ என்ற அச்சம் ஏற்படாமலில்லை. ஏதோ ஆண்டுக்கொன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தேறிக்கொண்டிருந்த பேருந்து தீப்பற்றி எரிந்த நிகழ்வு இன்று அசாதாரணமாக வாரத்திற்கு இரண்டு என்ற நிலையை அடைந்துள்ளது அரசுப்பேருந்தை நம்பி பயணிக்கும் ஏழை மற்றும் நடுத்தர பயணிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அஃது ஏன்? இரண்டு பேருந்துகளிலும் உயிரிழப்பு ஏதுமில்லை என்பது ஓர் ஆறுதல்; இறைவனின் சித்தம்.இவ்விரு நிகழ்வுகளிலும் விலைமதிப்புமிக்க உயிர் பலி நேர்ந்திருந்தால் என்ன நிலையாயிருக்கும்? சற்றே சிந்தித்து சீர்தூக்கிப் பாருங்கள்.அவ்வாறு ஓர் அசம்பாவிதம் நடந்திருந்தால் அதிலும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலையிட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அரசிடம் அறிக்கைக் கேட்டு கெடுவிதித்து….இத்யாதி….இத்யாதி….. அரசுத் தலைமை வழக்கறிஞர் அரசிடம் அவசரம் அவசரமாக அறிக்கையைப் பெற்று வழிமொழிந்து அதனை நீதியரசர்கள் ஏற்று புதியதாக கட்டுப்பாடுகள் விதிக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலை அரசுக்கு ஏற்படத்தான் வேண்டுமா? அதுவரையிலும் அரசுப் பேருந்துகளின் நிலை இவ்வாறுதான் தொடர வேண்டுமா?

எங்கு போய்கொண்டிருக்கிறது தமிழக போக்குவரத்துத்துறை? எதற்கு இருக்கின்றன வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள். எதற்கு இருக்கின்றனர் வாகன ஆய்வாளர்கள்? இவர்கள் தமது கடமைகளைச் சரிவர செய்கின்றனரா? ஏனிந்த இழி நிலை.? விடைதான் நமக்கே தெரியுமே? தனியார் நிறுவனங்களிடம் பேருந்துகளுக்கு கூண்டு கட்டவதைத் தாரை வார்த்தன இன்றைய நேற்றைய அரசுகள்.விளைவு அரசுப்பேருந்துகள் நிமிடங்களில் அக்னியின் கோரக்கரங்களுக்கு இரையாகின்றன.

அரை சதத்தைத் தாண்டிய என் நினைவுக்கு வருகிறது நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அக்காலத்தில் டி.வி.எஸ். நிறுவனத்தின் உறுதியான கூண்டுகளைப்பற்றி. அந்நிறுவனத்தின் பேருந்துகள் விரும்பத்தகாத வகையில் தீப்பிடிக்க நேர்ந்தால் அப்பேருந்து முழுவதுமாக எரிந்து தீரவேண்டுமானால் 24 மணி நேரமாகுமாம்.என்னைவிட இன்னும் வயது போன மூத்தவர்களுக்கு இது பற்றி இன்னும் அதிகமான அனுபவமிருக்கும். இது யதார்த்தம்.

இது போன்ற நிகழ்வுகளுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி மட்டும் அலசுவோம். போக்குவரத்துக் கழகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை என்பது பிரதான விவாதப் பொருளாகிறது.அதிகாரிகளின் (எல்லா அதிகாரிகளையும் கூற முடியாது., அவர்களிலும் நல்லவர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்) பொறுப்பற்ற , மெத்தனப்போக்கு, சுரண்டல், கீழ்நிலைப் பணியாளர்களை அளவுக்கும் அதிகமாக வேலை வாங்கிக் கசக்கிப்பிழியும் செயற்பாடுகள், போதிய நேரம் கொடுக்காமல் அவசரம் அவசரமாக வேலைகளை முடிக்க கட்டாயப் படுத்துதல், நேரம் தவறாமை கடைபிடிக்காதிருத்தல், அறைகுறையாக பழுது நீக்கப்பட்ட பேருந்துகளை வழித்தடங்களில் இயக்கிச்செல்ல ஓட்டுநர்களை வலியுறுத்துதல் இன்னும் பல காரணங்கள் விபத்துக்களை ஏற்படுத்த வழிவகுக்கின்றன. எங்கும் எதிலும் அவசரம். உதாரணத்திற்கு ஒரு டயர் பஞ்சரானால் அதனை பஞ்சர் ஒட்டி 4 மணி நேரம் உலரவைக்கவேண்டும், அதன் பின்னர் அதனை வண்டியில் பொருத்தி ஓடச்செய்யவேண்டும். இங்கு என்ன நிகழ்கிறது? காய்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படாமல் உடனடியாக வண்டியில் மாட்டச்செய்கின்றனர். அது போகின்ற வழியில் மீண்டும் பஞ்சராகி நடுவழியில் நிற்கின்ற அவலம்.இது பஞ்சரோடு நின்றுவிடுவதில்லை. அரசுக்கு அன்றைய தினம் கிடைக்கின்ற வருவாயிலும் மண்ணை அள்ளிப்போடுகின்றது என்பதை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள மறுக்கின்றனர்.

பல போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகளில் ஏற்படும் குறைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் கேட்கும் டிரிப் ஷீட்டுகளை அனுமதிப்பதேயில்லை. இக்கழகங்களிலுள்ள வாகன ஆய்வாளர்கள் வண்டிகளை ஓட்டிப்பார்த்து ஆய்வுகள் செய்வதில்லை.. வட்டார போக்குவரத்து அலுவலர்களும் எஃப்.சி-க்குச் செல்லும் பேருந்துகளை ஓட்டிப்பார்த்து ஆய்வுகள் செய்வதில்லை. தகுதிச்சான்றிதழ் பெறுவதற்காக அரசுப்பேருந்துகளில் இவர்கள் செய்யும் ஒரே வேலை பெயிண்ட் தடவுதல் மட்டுமே.விளைவு பேருந்துகளின் மேற்கூரைப் பெயர்ந்து காற்றில் பறக்கின்றது. மழைக்காலங்களில் பேருந்துக்குள் தண்ணீர். பக்கவாட்டுத் தகரங்கள் கிழிந்து சாலைகளில் செல்லும் பாதசாரிகளை சாகடிக்கின்றது.அருகில் செல்லும் வாகனங்களைப் பதம் பார்க்கின்றது. வாசற்படியில் இறங்கும் பயணிகளின் கை, கால்களை கிழிந்த தகடுகள் கிழித்து இரத்தக்காயம் ஏற்படச்செய்கின்றது.இருக்கைகளில் இருந்தால் பயணிகளின் பின்புறத்தை ஆணிகள் குத்திக்கிழிக்கின்றன. இன்னும் இன்னும் எத்தனையோ!

மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு மாறாக ஓட்டுநர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படாமல் தொடர்ந்து பணிபுரியச்செய்வது. நூறு பேருந்துகளுக்கு 250 ஓட்டுநர், 250 நடத்துனர், 250 தொழில்நுட்பப் பணியாளர்கள் அவசியம் இருத்தல் வேண்டும் என்ற விதியை ஆதாயங்களுக்காக பின் பற்றாது பயணிகளின் உயிருடன் விளையாடுவது. ஓய்வு பெறுபவர்களுக்குப் பதிலாக பணியாளர்களைத் தேர்வு செய்யாமல் இருக்கின்ற ஒரு சில பணியாளர்களையும் அத்துமீறி வேலைக்கு நிர்ப்பந்திப்பது.குறிப்பாக ஏற்கெனவே குறிப்பிட்டது போல் அவசரம் அவசரமாக பணிகளை மேற்கொள்ளச் செய்வது அசுர வேகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

பொறுப்பற்ற ஒரு சில அதிகாரிகளின் கவனக்குறைவே எத்தனையோ விபத்துக்களுக்கும் திப்பற்றி எரிவதற்கும் பிரதான காரணமாக திகழ்கின்றது என்பதை அறுதியிட்டுக் கூறலாம். எப்படி? எதனால்? இன்னும் சிலவற்றையும் கோட்டிட்டுக் காட்டலாம்.அவை பின்வருமாறு:-

அரசுப்பேருந்துகள் முழுக்க முழுக்க இப்போது நவீனம் என்ற பெயரால் அளவுக்கதிகமான கண்ணாடிகள், ஃபைபர், மைக்கா, நெகிழிகளின் (பிளாஸ்டிக்) ஆக்கிரமிப்புக்கு விடப்பட்டுவிட்டன. இரும்புத் தாதுக்களின் பயன்பாடு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. இருக்கைகள் முற்றிலுமாக ஃபைபர்களினால் செய்யப்பட்டு பொருத்தப்படுகிறது. இருக்கைகள் ரெக்ஸின் மேலுறைக்குள் ஸ்பாஞ்ச் வைத்து தைத்த காலங்கள் மலையேறிப்போய் தையல் வேலைகள் புறக்கணிக்கப்பட்டு தற்போது பசை கொண்டு ஃபைபர்களின் மேல் ஒட்டப்படுகிறது. மேற்கூரையின் உட்பகுதி, ஜன்னல் பகுதி, அதன் கீழ் பகுதி என எங்கு பார்த்தாலும் மைக்காவின் ஆதிக்கம் அரங்கேற்றப்பட்டு வருடங்கள் பலவாகிவிட்டன. விளைவு மேற்கூரையின் தார் சீட்டுகள் சரியானபடி ஒட்டப்படவில்லையானால் ஒரே நாள் மழையில் தண்ணீர் உட்புகுந்து உள் பகுதிலுள்ள மைக்காக்கள் மனித உடலில் ஏற்படும் கொப்புளங்களை போல் ஊதிப் பெருத்துவிடுகின்றன.ஜன்னல்களில் பொருத்தப்படும் கண்ணாடிகளின் சட்டங்கள் பேருந்துகள் இறங்கிய சில தினங்களுக்குள்ளாகவே ஸ்க்ரூக்கள் உருவி, அவை கவனிக்கப்படாமல் அதன் ஓட்டை வழியே ஜன்னலின் பக்கவாட்டுக்களில் தண்ணீர் இறங்கி அந்த மைக்காக்களும் ஊதிவிடுகின்றன. மேலிருந்து கீழிறங்கும் கண்ணாடிகளில் உள்ள கிளிப்புகள் கூட நெகிழிகளால் தயாரிக்கப்படுவதால் நான்கு நாட்களில் அக்கிளிப்புகள் உடைந்து போய்விடுவது அதைப் பராமரிக்காமல் விடுவதால் அக்கண்ணாடிகளை ஏற்றவும் இறக்கவும் முடியாது பயணிகள் காற்றின்றி புழுங்கி அவதியுறுவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.

எனவே விலை மதிப்புமிக்க மனித உயிர்களைக் கவனத்தில் கொண்டு விதிமுறைகளைக் கடைபிடித்து பேருந்துகளை நன்கு பராமரிக்கப் போதிய பணியாளர்களை நியமித்து பொறுப்பின்றியும் ஊழல்களில் ஈடுபட்டும் அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்தும் அதிகாரிகளக் கண்டறிந்து அவர்களைத் தண்டிக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமை. ஒரு மனிதனுக்கு அன்றாடம் எட்டு மணி நேரம் ஓய்வு அவசியம் என்பதைப் போல தொடர்ந்து நீண்டதூரம் செல்லும் பேருந்துகளுக்கும் போதிய ஓய்வு நேரம் கொடுக்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் கூண்டுகட்ட கொடுப்பதைக் கண்டிப்பாக கைவிடவேண்டும். நெகிழிகள், ஃபைபர்கள், மிதமிஞ்சிய கண்ணாடிகளின் பயன்பாட்டை முற்றிலுமாக களையப்படவேண்டும்.ஜன்னல்கள் முன்பு போல் நமது நாட்டின் கால நிலையைக் கருத்திற்கொண்டு ஷட்டர்களாக அமைத்தல் வேண்டும்.

ஓட்டை உடைசல் என அரசுப்பேருந்துகளுக்கு ஏன் அவப்பெயர் வந்தது? தனியார் பேருந்துகளுக்கு ஏனிந்த அவப்பெயர் ஏற்படவில்லை. ஒரு கணம் சிந்திப்போம். ஓட்டை உடைசல்களாக அரசுப் பேருந்துகளை மாற்றுவதில் அதன் ஓட்டுநர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்றால் அது மிகையில்லை. அரசுப்பேருந்து தானே என்ற அலட்சியம். ஒரு புதிய பேருந்து இறங்கி மூன்று நாட்களுக்குள் அதனை ஆங்காங்கே இடித்து உராயச்செய்து நாசம் செய்துவிடுகின்றனர் பல ஓட்டுநர்கள். அடுத்து பராமரிப்பு. தனியார் பேருந்துகளில் ஏற்படும் சிற்சிறு குறைகள் அவ்வப்போது களையப்படுகிறது.ஆனால் அரசுப்பேருந்துகளில் அவ்வாறில்லை. தனியார் பேருந்துகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைக்கு உத்தரவாதம் இல்லாததாலும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்துடனும் பொறுப்புடன் பணியாற்றுகின்றனர். தனியார் பேருந்துகளில் பக்கவாட்டுக்களில் உரசல் இல்லை, தகரங்கள் கிழிந்து தொங்குவதில்லை. டயர் பஞ்சராகி நடுவழியில் நிற்பதில்லை.

ஒரு தனியார் பேருந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேல் உழைக்கின்றது. ஓர் அரசுப் பேருந்து ஆறு அல்லது ஏழே ஆண்டுகள் உழைப்போடு அற்ப ஆயுளில் மறைகிறது. ஏன்? உறுதியான பல நல்ல பேருந்துகள் ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன என்ற ஒரே காரணத்திற்காக உடைப்பதற்கு வழங்கப்படுவது ஏன்? சரியான பராமரிப்பு செய்து அவற்றை நீண்ட காலம் ஓட்டச்செய்ய ஏன் முடியவில்லை.இதற்கும் அரசின் அக்கறையின்மை என்ற இழிநிலையே காரணம். முன்பு கழிக்கப்படும் பேருந்துகள் ஆ.சி. புத்தகத்துடன் ஓட்டப்படும் நிலையில் ஏலமிடப்பட்டன. அவற்றை ஏலமெடுப்போர் 20-25 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்றும் அற்புதமாக ஓட்டுகின்றனர்.அஃது எவ்வாறு? பராமரிப்புத்தான்.நீதிமன்றம் கூட எல்லா நிலையிலும் பழைய பேருந்துகளைத் தடை செய்யவில்லை.அவற்றை சிறப்பாக பராமரித்து செயற்படுத்தவே அறிவுறுத்துகின்றது. இலட்சக்கணக்கில் கொடுத்து அடிச்சட்டம் வாங்கி அதனை இன்னும் பல மடங்கு கொடுத்து கூண்டுகட்டி செலவு செய்த தொகையை மீட்டி எடுக்கும் முன்னரே ஓட்டை உடைசல் என பெயர் சூட்டி அதனை ஒதுக்குவது ஏன். அதனை ஆர் சி புத்தகத்துடன் மீண்டும் உபயோகிக்க நல்ல விலைக்கு கொடுக்காது உடைத்து நொறுக்குவதற்கு இந்த அரசு ஏன் அனுமதிக்கின்றது?

இறுதியாக அரசையும் போக்குவரத்துக் கழகங்களையும் கேட்டுக் கொள்வது….. பேருந்துகளைப் பராமரியுங்கள்.தரமான உதிரிப்பாகங்களைக் கொள்முதல் செய்யுங்கள்.வேலைக்குப் போதிய ஆட்களைப் பணியமர்த்துங்கள்.தனியாருடன் இரகசியமாக கைகோர்த்துக்கொண்டு ஊழல்களிலும் கையாடல்களிலும் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகளைக் களையெடுங்கள். அவர்களை வேலையிலிருந்தே தூக்குங்கள்.அசிரத்தையாக செயற்படும் ஓட்டுநர், நடத்துநர்களுக்குத் தக்க அறிவுரை வழங்குங்கள்.பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளித்து அரசுப் பேருந்துகளின் மீதான நம்பகத்தன்மையை அதிகரியுங்கள். இதுவே எமது வேண்டுகோள். இன்றைய நமது அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அவல நிலைய மிக தெளிவாக பதிவு செய்து இருக்கிறிர்கள் மிக்க நன்றி,

கூண்டு கட்டுதல்.
என்று முந்திய ஆட்சியாளர்கள் 2007ல் தனியாருக்கு தாரைவார்தார்களோ அன்றே பேருந்துகளின் உறுதி தன்மை கேள்விக்குறி ஆகிவிட்டது, நாம் பயணம் சேயும் பேருந்து அழகாக இருப்பதைவிட பாதுக்காப்பனதாகவும் நமது தட்ப வெட்ப சீதோசன நிலைக்கு தகுந்தார்போல் கூண்டு கட்டப்படவேண்டும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் மிகத்தெளிவாக இருக்கிறார்கள் ஐந்து முக்கியமான இடங்களில் (மத்திய தொழிற்கூடம் திருவனந்தபுரம், கோழிகோடு, அலுவா, மாவெளிகரா, எடப்பல்) இந்த இடங்களில் ஒரே மாதிரியான உறுதியான வடிவம் கொடுக்கப்படுகிறது ஆனால் இங்கோ ஓவ்வொருவரு மண்டலமும் இன்று வரையில் தனி தனி வடிவில் வெளிவந்தன அதனால் ஓரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்துக்கு புதிதாக வரும் பேருந்தில் வெளிப்புறம் மற்றும் ஜன்னல் கண்ணாடி உடைந்தாலோ அதை மாற்றுவதற்கு இவர்களிடம் அது போன்ற உதிரிப்பாகங்கள் இல்லை அதற்கு பதிலாக அரைகுறை கண்ணாடிகள் ஜன்னலில் தகரங்கள் அல்லது மைகா கொண்டு அந்த இடத்தை மறைகிறார்கள் அந்த இடத்தில் அமரும் பயணியின் நிலைமைதான் பரிதாபத்துக்குரியது. இன்று தனியார்வசம் ஒப்படைத்தபிறகு சென்ற ஆண்டு ஒரே வடிவில் பேருந்துகள் வெளிவந்தன இதை என் அனைத்து மண்டலங்களும் பின்பற்றி ஒரே மாதிரியான வடிவில் பேருந்துகளை வடிவமைகலாமே... தனியாரிடம் செல்வதற்கு பதிலாக அனைத்து மண்டலங்களின் கூண்டு கட்டும் பிரிவையும் நவினபடுத்தி ஒரே மாதிரியான கூண்டுகள் கட்டலாம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளும் ஒரே மாதிரியான வடிவில் இருக்கும். முதலில் கண்ணாடி ஜன்னல்கள் வைத்து வடிவம் கொடுத்துவிட்டு பின் 4 ஆண்டுகள் கழித்து ஷட்டர் மாடல்களாக மாற்றி இருவேளை செய்யவும் வேண்டாம்.

இருவேளை முதலில் கண்ணாடி ஜன்னல்கள் வைத்துவிட்டு பிறகு ஷட்டர் மாடல்


நன்றி தண்டபாணி அவர்கள்

டிரிப் ஷீட்டுகள் / பராமரிப்பு
டிரிப் ஷீட்டுகளில் ஓட்டுநர் தங்கள் குறைகளை எழுதி வைத்தாலும் அதை சரிபார்பதற்கு போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் பணிமனையில் இல்லை, அதுமட்டுமல்ல இன்றைய தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர்களும் இல்லை இன்று புதிய பேருந்துகள் Inline Mechanisam அதை பணிமனையில் உள்ளவர்கள் ஏதேனும் கோளாறுகள் ஏற்பாட்டால் சரிசெய்வார்கள் ஆனால் இதற்கு முன்பு வாங்கப்பட்ட EDC வகை பேருந்துகளை சரிசெய்வதற்கு நாம் அசோக்லேயலாண்டின் சேவை மையத்தையே அணுகவேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் அளிப்பதற்கு அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை, பின்பு ஏன் இவர்கள் சொகுசு பேருந்துகளை இயக்க ஆசைப்படுகிறார்கள், பின்பு அந்த பேருந்துகளையும் வெகு விரைவில் காயலான்கடைக்கு அனுப்பிவிடுவார்கள் பாராமரிப்பு பணியாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாமல் புதிய தொழிநுட்பம் கொண்ட பேருந்துகள் வாங்குவது முட்டாள்தனமான முடிவு. நான் சென்னையில் பயணம் செய்த பேருந்தின் முகப்புவிளக்குகள் ஒன்று எரியவில்லை அதற்கு அந்த பணிமனையின் உயரதிகாரி ஓட்டுனரிடம் சொல்லிருகிறார் அவன் அவன் ரெண்டு லைட்டும் இல்லாம ஒட்டுறான் நீ என்னபா போ ஒன்னும் ஆகாது.

கழிக்கப்பட்ட பேருந்துகள்
முதல்வர் உத்தரவு காற்றில்தான் பறக்கிறது. பேருந்துகள் கழிப்பதில் சரியான அணுகுமுறையை அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை நீங்கள் கூறுவதுபோல் ஆர்.சி புத்தகங்களுடன் விற்று இருக்கலாம் அனால் இங்கு எல்லாம் தலைகீழ் ஓரு பணிமனைக்கு பத்து புதிய பேருந்துகள் வந்தால் உடனே ஐந்து பழைய பேருந்துகளை கழித்துள்ளனர், பேருந்தின் பதிவு எண் வரிசையில் கழிக்கவில்லை 7094 கழிக்கபட்டுள்ளது ஆனால் 7055, 6904 போன்ற பழைய பேருந்துகள் இன்னும் வழித்தடத்தில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது கழிப்பதிலும் நிறைய குளறுப்படிகள் நல்ல உதிரிப்பாகங்களை எடுத்து வைத்துள்ளோம் என்கிறார்கள் இதில் உதிரிபாகங்களில் முன்புறத்தில் உள்ள கண்ணாடி மற்றும் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்ற பழைய பாகங்களை இந்த புதிய 12m பேருந்துகளுக்கு பயன்படுத்த முடியாது பின்பு இக்கழிவுகளை அப்புறபடுதுதல் என்ற பெயரில் ஓரு கணிசமான தொகையை பார்க்கலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்து இருப்பார்கள் போலும்.

TN-01N-214 இன்னும் நல்ல நிலையில் ஒடிக்கொண்டுஇருக்கிறது

Link

டி.வி.எஸ். நிறுவனம்
நான் இந்த நிறுவனத்தை பற்றி கேள்விபட்ட ஒன்று ஓட்டுனர் பேருந்தை இயக்க ஆரம்பிக்கும்போது பேருந்து இயங்கவில்லை என்றால் அந்த பேருந்தை ஆட்கள் கொண்டு பின்னாலிருந்து தள்ளி இயக்ககூடாது அதற்கு பதில் மாற்றுபேருந்து தான் இயக்கப்படவேண்டும், இன்னொரு எல்லோரும் அறிந்த செய்தி அந்நாளில் மதுரை நகரில் குதிரை வண்டிகள் அதிகம் குதிரையின் லாடங்கள் பட்டு டயர் பஞ்சுரகிவிடகூடாது என்பதற்காக மின்காந்தங்கள் பொறுத்தப்பட்ட ஓர் வண்டி நகர பேருந்துகள் இயக்கத்துக்கு முந்தாகவே சென்று பாதையில் உள்ள இரும்பு பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வந்துவிடுமாம்.

--அருண் __________________

ஜி.டி.நாயுடு.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.



            கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில் பேருந்து போக்குவரத்து தொடங்கி 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே பேருந்துகளை இயக்கி அனைவரையும் அதிசயிக்கச் செய்தவர் தமிழ்நாட்டின் அறிவியல் மேதை ஜி.டி நாயுடு.
அவரது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஜி டி நாயுடு கோவையில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய பஸ் குறித்த சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
               நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.

மூக்கு வண்டி
1921ம் வருடத்தின் இறுதியில் கோவையில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயங்கி வந்தது. கோவையிலிருந்து உடுமலைபேட்டைக்கும், பின்னர் பழனிக்கும் சென்று வந்த அந்த பேருந்தில் முப்பதுக்கும் குறைவான இருக்கைகளே இருந்துள்ளது.
பேருந்தின் மேல் தளம் இப்போது இருப்பதுபோல இல்லாமல், நான்கு ஓரங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. அதில் மரத்தினால் செய்யப்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பேருந்தின் முன்னால் என்ஜின் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் மூக்கு வைத்த வண்டி என்று பட்டப்பெயர் வைத்து மக்கள் கூப்பிட்டு வந்துள்ளனர்.
இந்த வண்டியின் ஓட்டுனர், நடத்துனர், உதவியாளர், உரிமையாளர் என எல்லா பொறுப்புகளையும் ஏற்று நடத்தியவர் கோபால்சாமி நாயுடுவின் மகன் துரைசாமி நாயுடு என்கிற ஜி.டி.நாயுடு தான். மிகப்பெரிய விஞ்ஞானியான அவர், இந்த பேருந்தை இயக்கியதே ஒரு தனி கதை.
யுனைடெட் மோட்டார் சர்வீஸ்
பருத்தி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தாமல் அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த வெள்ளைக்காரான ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார் ஜி.டி நாயுடு. அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.
முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன்முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு. தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார்.
அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனை படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.
மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.
எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க ‘வைப்ரேசன் டெஸ்டர்’ என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் .
பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அவர் இத்தகைய கருவிகளை கண்டறிந்து சாதனை படைத்தார். இவருடைய பேருந்தில் பயணிகளை கவர பேருந்தில் தேநீர் பழச்சாறு வகைகள் கொடுக்கப்பட்டதாகவும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் நினைவு கூர்கின்றனர்.
இலவசமாக கொடுத்தார்
ஆங்கிலேய அரசு வருமான வரி என்ற பெயரில் ஜி.டி.நாயுடுவின் சொத்தில் 90 விழுக்காடு தொகையை வரியாக கேட்டதால், 1938 ஆம் வருடம் தன்னுடைய யுனைட்டட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்திலிருந்த பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய பேருந்துகளை கோவை வட்டார போக்குவரத்து கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்துவிட்டார்.
மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்த ஜி.டிநாயுடு தனது 80 வது வயதில் 4 -1 -1974 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
மிக எளிமையான அந்த விஞ்ஞானியின், அறிவியல் மாமேதையின் நினைவு நாளில் கோவையில் முதல் பஸ் ஓடியதன் 90வது ஆண்டு தினத்தை நினைவு நன்றியுடன் நினைவு கூர்வதே நாயுடுவுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும்..!

நடத்துனரை, கத்தி, அரிவாளால், சரமாரியாக வெட்டிய,

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.


 

பதிவு செய்த நாள்

17 பிப்
2014
23:33
 சென்னை: பேருந்தில், தாளம் போட்டு, பாட்டு பாடியதை கண்டித்த நடத்துனரை, கத்தி, அரிவாளால், சரமாரியாக வெட்டிய, புதுக் கல்லூரி மாணவர்களின் செயலால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணா சதுக்கம் பூந்தமல்லி செல்லும், தடம் எண் "25ஜி' பேருந்து, நேற்று பிற்பகல், 2:30 மணிக்கு, ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையில் வந்த போது, புதுக் கல்லூரி மாணவர்கள், 10க்கும் மேற்பட்டோர், தாளம் போட்டு, பாட்டு பாடி, ஆபாச வார்த்தைகளால் பேசினர். இதை, நடத்துனர் பாண்டியன் கண்டித்தார். ஆனால், மாணவர்கள், நடத்துனரின் கண்டிப்பை அலட்சியப்படுத்தி, மீண்டும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஒரு மணவர், அலைபேசியில் யாரையோ தொடர்பு கொண்டு, "பேருந்து நடத்துனர், எங்களை தரக்குறைவாக திட்டுகிறார்' என கூறிவிட்டு, நடத்துனரை சரமாரியாக தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர், பேருந்தை சாலையிலேயே நிறுத்தினார். அதற்குள், இரண்டு இருசக்கர வாகனங்களில், கத்தி, அரிவாள்களுடன் வந்த சிலர், நடத்துனரை இறக்கி, சரமாரியாக வெட்டி, தப்பினர். ஆபத்தான நிலையில் இருந்த பாண்டியனை, ஓட்டுனர் மற்றும் பயணிகள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த, 10க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், பேருந்துகளை நிறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனாம்பேட்டை உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, "நடத்துனரை தாக்கியவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர்' எனக் கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதை, சம்பவத்தை நேரில் பார்த்த கல்லூரி மாணவர் ஒருவர், "இந்த தாக்குதலில் ஈடுட்டது நியூ கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்கள் தான்' என, போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பீட்டர் சாலை வழியாகவா...ஆளை விடுங்கப்பா...! : போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாணவர்களின் அராஜகத்தால், பீட்டர் சாலை வழியாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள், "நாங்கள் போக மாட்டோம்' என கூறி விடுகின்றனர். கடந்த காலங்களில் எவ்வளவோ சம்பவங்கள் நடந்த போதிலும், போலீசார், கண் துடைப்புக்கு, சிலர் மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கின்றனர். மாணவர்கள் அட்டகாசத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர, கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
Click Here

பயணிகள் நிம்மதியான பயணத்தை

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.


              சென்னை: போக்குவரத்து துறையில் 10 ஆயிரம் காலி பணியிடம்  காரணமாக பஸ்கள் பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்பதில் சிக்கல்  நீடித்து வருகிறது. இதனால், அரசு பஸ்கள் ஆங்காங்கே  பழுதடைவதால், பயணிகள் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள  முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  தமிழகத்தில், சென்னை, விழுப்புரம், கோயம்புத்தூர், சேலம்,  கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி  உள்ளிட்ட 8 கோட்டங்களில்  சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன.
பஸ்களுக்கு தகுந்தாற்போல் அதனை பராமரிக்க ஆட்கள் போதுமான  அளவில் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச் சாட்டு நிலவி  வருகிறது. எனவே, பழுதடைந்த பஸ்களை உடனடியாக சரிபார்க்க  முடியாமல், அவை பணிமனைகளில் முடங்கி கிடக்கிறது.

இதுகுறித்து சென்னை கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  கூறியதாவது: ஆரம்ப காலக்கட்டத்தில் ஓட்டுனர், நடத்துனர்,  அலுவலர், தொழில் நுட்ப பணியாளர் என 2 பஸ்களுக்கு 15 பேர்  வீதம் பணி புரிந்து வந்தனர். கடந்த 2003ம் ஆண்டில் தமிழக அரசு  ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அதனை தொடர்ந்து 2  பஸ்களுக்கு 13 பேர் என குறைக்கப்பட்டது. இதனால் 8  கோட்டங்களிலும் தொழில் நுட்ப பணியாளர்கள் பிரிவில் 5 ஆயிரமும்,  ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் என 5 ஆயிரமும் மொத்தம் 10  ஆயிரத்துக்கும் மேல் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

தர்மபுரி பஸ் எரிப்பு




சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு

பஸ்சை யானை துரத்துவது

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.



சத்தியமங்கலம்: 
         சத்தியமங்கலம், தலமலை அருகே யானை கூட்டத்திடம் தனியார் பஸ் ஒன்று சிக்கிக் கொண்டதால் பயணிகள் அலறினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்பம் வழியாக தாளவாடிக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ராமரணை பஸ் நிறுத்தம் அருகே ஒற்றை பெண் யானை சாலையோர செடிமறைவில் நின்று கொண்டிருந்ததை ஓட்டுனர் பார்த்தார். அவர் பஸ்சை மெதுவாக ஓட்டி செல்ல முயன்றபோது யானை சாலையை வழிமறித்து நிற்பதும் பின் வனத்துக்குள் செல்வதுமாக போக்கு காட்டியது. பஸ்சை யானை துரத்துவதும் ஓட்டுனர் பஸ்சை பின்னால் ஓட்டுவதுமாக சில நிமிடங்கள் நடந்தன. இதனால், ஒரு மணி நேரமாக அந்த இடத்தை கடக்கமுடியாமல் ஓட்டுனர் தவித்ததுடன் பயணிகளும் அலறினர்.

ஒருவழியாக யானை தாக்குதலில் இருந்து தப்பித்து பஸ்சை ஓட்டி சென்றார். இதன்பிறகு, சற்றுதூரத்திற்கு அப்பால் பஸ்சை நிறுத்தி பார்த்தபோது, 11 யானைகள் கொண்ட ஒரு யானை கூட்டம் குட்டிகளுடன் சாலையை கடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, யானை கூட்டத்தை தாய் யானை வழி நடத்துவது இயல்பான ஒன்று. அவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது தாய்யானை அதற்கு முன்பாகவே சென்று அதன் வழித்தடத்தை உளவு பார்க்கும். இவ்வாறு உளவுபார்த்துதான் தனது கூட்டத்தை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தாய் யானை இம்மாதிரி நடந்து கொண்டது‘‘ என்றார்.

அரசு பேருந்துகளின் நட்டம்!! ஏன்?


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

                 தனியார்மயமும் தாராளமயமும் மக்களை நாட்டின் குறுக்கும் நெடுக்கும் வீசியெறிந்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு பெருமளவு பேருந்தைத்தான் நாட வேண்டியிருக்கிறது.
கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே தொடர்வண்டியில் இடம் நிச்சயம். மேலும், வேண்டிய நேரத்தில் கிடைக்கின்றன, கொண்டு செல்கின்றன என்ற காரணங்களாலும் பேருந்துகளே மக்களுக்கு பெருமளவு கை கொடுக்கின்றன. இதில் அரசுப் பேருந்துகள் அதிகரிக்கப்படாமல் அதே எண்ணிக்கையிலிருந்தாலும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அரசுப்பேருந்துகள் தனியார் பேருந்துகளைவிட சொகுசாகவும், வசதியாகவும், முக்கியமாக சரியான நேரத்துக்குக் சென்றுவிடும்படியாகவும் இருக்கின்றன என்பதே பெருமளவு சொல்லப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.
இன்று எல்லா முக்கிய நகரங்களுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள், ஏசி, ஸ்லீப்பர் போன்ற வசதிகள், இணையத்தில் பதிவு செய்துக்கொளளும் வசதி, குடிநீர் பாட்டில், முகந்துடைத்துக் கொள்ள கைக்குட்டைகள் என்று வாடிக்கையாளர்களை பலவகைகளில் ஈர்க்கின்றன. அதோடு, எவ்வளவு தொலைவாக இருந்தாலும் பயண நேரத்தை மிகக்குறுகிய நேரத்தில்  சென்னையிலிருந்து மதுரையையோ ஏன் கன்னியாகுமரியைக்கூட எட்டிவிடுகின்றன இப்பேருந்துகள்.
சான்றாக, சென்னையிலிருந்து மதுரைக்கான சராசரி தூரம் 592 கிமீ என்றால், தனியார் பேருந்துகள் 7.30 மணிநேரத்துகுள்ளேயே  சென்றடைகின்றன. மாறாக அரசுப்பேருந்துகள் பத்து மணிநேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கின்றன.
எனில், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் எப்படி இது சாத்தியம்? இந்தியாவில், சட்டப்படி நகர்ப்புறத்தில் சராசரி மணிக்கு 50 கிமீ வேகமாகமும்,புறநகரில் சராசரியாக 80கிமீ வேகமும் செல்லலாம். ஆனால், இந்த ஆம்னி பேருந்துகள் இவ்விதிகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. இதற்கு அவ்வப்போது நிகழும் விபத்துகளே சாட்சி.
இப்பேருந்துகள் சராசரியாக, மணிக்கு 110 கிமீ மேல் அல்லது திடீரென்று கட்டுக்குள் கொண்டுவரமுடியாத அளவு வேகத்தில்தான் தான் செல்கின்றன. அதோடு, அரசுப் பேருந்துகளைவிட இதில் கட்டணமும் பலமடங்கு அதிகம். சராசரியாக, 900ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும் இக்கட்டணங்கள், பஸ்சைப் பொறுத்து 2000ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுவதுண்டு.
நேரம், வசதி போன்ற காரணங்களால் தனியார் பேருந்துகளை மக்கள் பெருமளவு விரும்புவதாகச் சொல்லப்பட்டாலும் தனியார் பேருந்துகளின் வருமானம் அதில் பயணம் செய்பவர்களனால் மட்டுமல்ல பொருட்கள் ஏற்றிச்செல்லப்படுவதாலும் வருகின்றது. சீட்டுக்குக் கீழாக இருக்கும் தளம் பொருட்களை வைக்கத்தான் என்றாலும் முறைகேடாக பல்வேறு பொருட்களை வைத்து ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதில், வேதிப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் அடங்கும்.
இப்படி அளவுக்கதிகமான பாரத்துடன், கட்டுக்கடங்காத வேகத்தில் பேருந்துகள் ஓட்டிச் செல்லப்படும்போது விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதோடு, ஒரு பேருந்துக்கு ஒரே டிரைவர் மற்றும் கிளீனர்தான் இருக்கின்றனர். தனியார் பேருந்துகள் வந்த புதிதில் இரண்டு டிரைவர்கள் மாறி,மாறி ஓட்டுவதை கண்டிருக்கலாம். தற்போது நிலைமை மாறிவிட்டது. எவ்வளவு  நீண்ட தூர பயணமென்றாலும்,ஒரு வண்டிக்கு ஒரே டிரைவர் மற்றும் ஒரு கிளீனர்தான்.
பெரும்பாலான தனியார் பேருந்து டிரைவர்களுக்கு போதுமான ஓய்வு இல்லாத நிலையில்தான், தொடர்ந்து வண்டியோட்டிக்கொண்டு வருகிறார்கள். எப்படியும் சொன்ன நேரத்திற்குள்ளாக இலக்கை அடைந்துவிட விரட்டிப்பிடித்து ஓட்டுகிறார்கள். இதில் கொஞ்சம் அசந்தாலும் அது அடுத்தநாள் செய்தியாகிவிடுகிறது. சமீபத்தில், வேலூருக்கு அருகில் நிகழ்ந்த பொள்ளாச்சி பேருந்து விபத்து கூட இந்த காரணங்களை உள்ளடக்கியதுதான். கட்டணமும்  விபத்துக்கான சாத்தியங்களும் அதிகமென்றாலும்  ஏன் தனியார் பேருந்துகளையே நாடுகிறார்கள்?
முதலாவதாக, அரசுப்பேருந்துகள் இன்றைய தேவைக்கேற்றபடி எண்ணிக்கையில் இல்லை என்பது ஒரு காரணம். சமயங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அவை மாற்றுப்பேருந்துகளே. அதன் இயக்கமும் சரியாக இருப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசுப்போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்குவதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுவதும் நாம் அறிவோம்.
எனில் தனியார் பேருந்துகள் மட்டும் நாளுக்குநாள் வளர்ந்து வருவது எங்ஙனம்?  தமிழக அரசுப் போக்குவரத்துறை பயணித்த தனியார்மய பாதையை சற்றுப் பார்ப்போம்.
2000-க்கு முன்புவரை தமிழகத்தில்  மட்டும் 21 போக்குவரத்து கழகங்கள் இருந்தன. இன்று அவற்றில் பல கழகங்கள் நாடு பயணித்த ‘முன்னேற்ற’ப்பாதையில் காணாமல் போய்விட்டன. 2002-இல், சென்னையிலும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஓடிக்கொண்டிருந்த 12,905 பேருந்துகளில் 7,742 பேருந்துகளை அன்றைய அம்மா அரசு திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.
28 மாவட்டங்களில் பாதிக்குப்பாதியாக அரசுப் பேருந்துகளை குறைக்கப் போவதாகவும், ட்ரிப்புகளையும் குறைக்கப் போவதாகவும் அவற்றை தனியாருக்கு விடப்போவதாகவும் அறிவித்தது. இறுதியில் போக்குவரத்துத் துறையை தனியாருக்கு விடப்போவதில்லை என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூட்களை மட்டும் தனியாருக்கு விடப் போவதாகவும் இதனால் ஊரகப் பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றும் அறிவித்தார் ஜெயலலிதா.
அக்டோபர் 2001த்தில் போனஸ் கேட்டு வேலைநிறுத்தம் செய்த போக்குவரத்து ஊழியர்களிடம் தனது உண்மையான முகத்தை காட்டியது ஜெயலலிதா அரசு. தீவிர பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும் சென்ற ஆண்டைப் போல் போனசை தரமுடியாதென்றும் கூறி ஊழியர்களின் வயிற்றில் அடித்தது. அதோடு, பயிற்சி பெறாத டிரைவர்களையும்  தனியார் பேருந்துகள், வேன்களையும் களமிறக்கியது. வேறுவழியில்லாமல், போக்குவரத்துத் துறையினர் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இந்த தனியார் மயமாக்கத்தை எதிர்த்து பல எதிர்ப்புகள் கிளம்பியது நினைவிருக்கலாம்.  உண்மையில், இதில் எந்த பொருளாதார சிக்கலும் இல்லை.
போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்குதல் என்பது உலகவங்கி, மத்திய அரசு மற்றும் அதன்  தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு அங்கமே. அதனை செயல்படுத்த ஜெயலலிதா போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை பயன்படுத்திக்கொண்டார். இன்றும் அதில் பெரிய மாற்றமில்லை. பல ஆண்டுகளாக புதிய ஊழியர்களை நியமனம் செய்வதில்லை. பெரும்பாலோனார் ஒப்பந்த தொழிலாளர்களாகவே நீடிக்கின்றனர். அதோடு, போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் கிடையாது. இது, அரசே திட்டமிட்டு பொதுத்துறையை ஒழிக்கிறது என்பதையே காட்டுகிறது.
இந்த தனியார்மயமாக்கம் போக்குவரத்துத்துறை ஊழியர்களின் குடும்பங்களையும், பொதுபோக்குவரத்தை நாடும் அன்றாடங்காய்ச்சிகளையும்தான் பெருமளவு பாதிக்கிறது. பலருக்கு விஆர்எஸ் திட்டங்கள் கொடுத்தாலும் அது நிரந்தர வேலை மற்றும் ஊதியம் ஆகாது. அது ஒரு ஆட்குறைப்பு நடவடிக்கை மட்டுமே. அதோடு, இது பொதுமக்களை பாரதூரமாக பாதிக்கும் ஒரு நடவடிக்கை.
தோராயமாக, 25 லட்சம் பள்ளி/கல்லூரி மாணவர்கள் இலவச பஸ் பாஸ்களை பயன்படுத்துகின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் , உடல்நலக்குறைபாடு உள்ளோர், வயதானவர்கள் என்று பலருக்கும் பேருந்தில் சலுகைகள் உண்டு. தனியார் மயமாக்கல் இதனை பாதிப்பதோடு அவர்களுக்குள் இருக்கும் தொழில் முறை போட்டியால் சாலை விபத்துகளையும் அதிகரிக்க காரணமாகிறது. தனியார் பேருந்து முதலாளிகளுக்கு லாபம்தான் முக்கியமேயொழிய லாபமற்ற ரூட்களை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்வது நோக்கமல்ல. அதோடு பேருந்து கட்டணங்களும் அவ்வப்போது அதிகரிக்கும். போக்குவரத்துத்துறையை முற்றிலும் அரசே எடுத்து நடத்தினால் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை.
தனியார்பேருந்து முதலாளிகள் வருடா வருடம் புதிய புதிய பேருந்துகளை சொகுசான பேருந்துகளை வாங்கிய வண்ணம் உள்ளனர். எப்படி?
எ.கா-ஆக, சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஒரு பேருந்தின் விவரம் கீழ்வருமாறு:
வரவு:
சராசரி இருக்கைகள்                 34
சராசரி கட்டணம் ஒரு நபருக்கு      ரூ.600
ஒரு நாள் சராசரி வருமானம்      ரூ.20,400
சுமை ஏற்றுவதால் வருமானம் ஒரு நாளைக்கு ரூ.10,000
சாராசரி நாள் வருமானம்             ரூ. 30,400
சராசரி மாத வருமானம்               ரூ.9,12,000
சராசரி ஆண்டு வருமானம்       ரூ.1,09,44,000
செலவு:
ஓட்டுநர் ஊதியம் ஒரு நாளைக்கு      ரூ.300
உதவியாளர் ஊதியம் ஒரு நாளைக்கு  ரூ.200
டீசல் செலவு                ரூ.5,100
பழுதுபார்க்கும் செலவு              ரூ.1,500
ஒரு நாள் சராசரி செலவு               ரூ.7,100
ஒரு மாத சராசரி செலவு              ரூ.2,13,000
ஒரு ஆண்டு சராசரி செலவு            ரூ.25,56,000
சராசரி பேருந்தின் மதிப்பு        ரூ.45,00,000
சராசரி பேருந்து பயண வரிச் செலவு   ரூ.20,00,000
சராசரி மொத்த செலவு           ரூ.90,56,000
சராசரி ஆண்டு லாபம் ரூ.18,88,000
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் போக்குவரத்து இதே போல்  தனியாரிடம் விடப்பட்டது. அந்த மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை எம்.கே தாமஸின் Urban Bus Transport in India: Half a Century’s Stride புத்தகத்தில் அறியலாம்.  அரசாங்கத்தைவிட நல்ல சேவையை மக்களுக்கு அளிப்பதாக கூறி தனியாரிடம் ஒப்படைத்தாலும் இம்முடிவு எவ்வளவு தவறானது என்பதை அவர்கள் ஒரு கட்டத்தில் உணர்ந்தார்கள்.
தனியார்முதலாளிகள் லாபநோக்கோடு செயல்பட்டதில் பொதுமக்களின் பாதுகாப்பை கண்டு கொள்ளவில்லை. இந்த மாநிலங்களில் மக்கள் போக்குவரத்துத் துறையை அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியதாக கூறுகிறார் அவர்.
எனில், தமிழ்நாட்டிலும் அது சாத்தியமே. போக்குவரத்து ஊழியர்களும், மக்களும் கரம் கோர்த்து போராடவேண்டிய தேவை இங்கு இருக்கிறது. அரசியலற்ற தொழிற்சங்கங்களாக பிரிந்து அடித்துக்கொள்ளாமல் ஊழியர்கள் தங்கள் உரிமையை மீட்டெடுக்கவேண்டும், அதோடு, மக்களும் தங்களது பொதுச்சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தை தட்டிக் கேட்க வேண்டும். தனியார் பேருந்து முதலாளிகள் தங்களது லாபத்துக்காக பொதுமக்களின் உயிரை பணயம் வைப்பதை உணர்ந்து ஒன்றாக திரள வேண்டும்.
இந்த கோர விபத்துகளை, சுரண்டலை தடுக்க இது ஒன்றுதான் வழி.

டீசல் விலை

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.


             கடந்த 17 ஜனவரி 2013 நள்ளிரவு முதல் அறிவிக்கப்பட்ட டீசல் விலை உயர்வில் மொத்தமாக கொள்முதல் செய்யும் மாநில அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே, ராணுவம் போன்றவற்றிற்கு டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 61.67, அதே டீசல் தனியார் பெட்ரோல் விற்பனையகங்களில் லிட்டர் ஒன்றுக்கு ரூ 50.35 அதாவது மொத்தமாக வாங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ 11 அதிகம் என்பதை டீசல் விலை உயர்வு : அரசு பேருந்தை ஒழிக்கும் சதி ! என்கிற பதிவில்  சுட்டிக் காண்பித்து, இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை விளக்கியிருந்தோம். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களும் தொடர்ந்து 5 ஆண்டுகளாக கோடிகளில் லாபம் ஈட்டிய வண்ணம்தான் உள்ளது என்பதற்கான ஆதாரத்தையும் பதிவு செய்திருந்தோம். இது போன்ற இரட்டை விலைக்கொள்கை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தெளிவுபடுத்தி யிருந்தோம்.
நாம் ஐயம் தெரிவித்திருந்தபடி சில தினங்களிலேயே, அரசு பேருந்துகள் தனியார் டீசல் நிலையங்களில் கொள்முதல் துவங்கியது. கடந்த 9 மாத காலத்தில் டீசல் விலை பல முறை உயர்த்தப்பட்டு மொத்த கொள்முதலுக்கு ரூ 66.80, தனியார் கொள்முதலுக்கு ரூ 55.37 என்றுள்ளது.
ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலிருந்தும் கொள்முதல் செய்யப்படும் டீசல் லிட்டருக்கு 35 பைசா போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனா், பொது மேலாளர், மற்றும் அமைச்சருக்கு செல்லத் துவங்கியது. சில கழகங்களில் தனியார் முதலாளிகள் நேரடியாக முழு லோடையும் கழக வளாகத்திற்குள் இருக்கும் பங்க்-ல் இறக்கி விடுகின்றனர். கமிஷ‌னுக்கு கமிஷ‌ன், தனியாருக்கு வேலைப்பளுவும் இல்லை
ஒவ்வொரு பேருந்திற்கும் ஒன்று முதல் இரண்டு லிட்டர் குறைவாகத்தான் போடப்படுகிறது (அதாவது 78 லிட்டர் போட்டு விட்டு, 80 லிட்டர் என எழுதிக் கொள்கிறார்கள்). இதற்கென பணி பார்க்கும் கழக ஏ.இ. மற்றும் சம்பந்தப்பட்ட கிளை மேலாளரின் டூ வீலருக்கு இலவச பெட்ரோல் போட்டு கவனித்துக் கொள்ளப்படுகிறது.
இது ஒரு புறம் என்றாலும் தமிழக அரசு மற்றும் மேற்கு வங்க அரசுகள் இந்த இரட்டை விலைக் கொள்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த விலை உயர்விற்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தாக்கல் செய்திருந்த மனுவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடத்தப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது.
தொழிற்சங்க நோட்டிஸ்இந்தியாவில் பெரும்பகுதி டீசல் விநியோகம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் என்கிற மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து பயன்பாட்டிற்கான பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றும் பணியில் 40 சதவீதம் (ரிபைனரிஸ்) ரிலையன்ஸ் அம்பானி குழுமத்திடம் தான் உள்ளது. எனவே இன்றைய தாராளமயமாக்கல் சூழலில், ஓட்டுக்கட்சி அரசியல் சூழலில் எரிபொருள் விலையை அடிக்கடி உயர்த்த வேண்டும் என ஆளும் கட்சியின் கழுத்தில் கத்தியை வைப்பது இத்தகைய கார்ப்பரேட் பெரு முதலாளிகளே.
கோடிகளில் லாபத்தை காண்பித்துவரும் இந்நிறுவனங்கள் ஏன் நஷ்டம் என தெரிவிக்கிறார்கள் என்றால் ஒரு வருடத்திற்கு ஈட்ட வேண்டிய லாப குறியீடு (டார்கெட்) ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு அந்த அளவிலிருந்து லாபம் குறையும் போதெல்லாம் நட்டம் என அரசு கூச்சலிடுவதுதான் வேடிக்கையான மற்றும் நிதர்சனமான உண்மை.
இப்படிப்பட்ட சூழலில் பல நூறு வழக்குகள் நிலுவையில் இருக்கையில் அம்பானி போன்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடிய, மாநில அரசு பொதுத் துறை போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தொடர்ந்த இந்த வழக்கை மிக விரைவாக விசாரித்து இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஒரு தீர்ப்பை அளித்துள்ளனர். போக்குவரத்துக் கழகங்களின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், இது தொடர்பாக உயர்நீதிமன்றங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளையும் ரத்து செய்து உத்திரவிட்டிருக்கின்றனர்.
ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மட்டும் கார்ப்பரேட் முதலாளிகளுடன் கைகோர்த்து தனியார் மயத்திற்கு நாளும், பொழுதும் அயராது உழைக்கவில்லை, நீதித்துறையும் அந்த வரிசையில்தான் நிற்கிறது என்பது இதன் மூலம் மேலும் ஒரு முறை நிதர்சனமாகியிருக்கிறது. முக்கியமாக பொதுப்போக்குவரத்தை தகர்த்து விட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பிடியில் மக்களை தள்ளுவதற்கான வெளிப்படையான சதியே இது.
அரசின் கொள்கை முடிவு என எது வந்தாலும் ஆதரிப்பது, உன்னால் சமாளிக்க முடியவில்லையா, மக்கள் மீது திணியுங்கள் என சொல்வது – இதற்குப் பெயர் நீதிபரிபாலனமா? மக்கள்தான் சிந்தித்து ஒன்றுபட்ட போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும்.
- சித்ரகுப்தன்