சனி, 19 ஏப்ரல், 2014

பயணிகள் நிம்மதியான பயணத்தை

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.


              சென்னை: போக்குவரத்து துறையில் 10 ஆயிரம் காலி பணியிடம்  காரணமாக பஸ்கள் பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்பதில் சிக்கல்  நீடித்து வருகிறது. இதனால், அரசு பஸ்கள் ஆங்காங்கே  பழுதடைவதால், பயணிகள் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள  முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  தமிழகத்தில், சென்னை, விழுப்புரம், கோயம்புத்தூர், சேலம்,  கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி  உள்ளிட்ட 8 கோட்டங்களில்  சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன.
பஸ்களுக்கு தகுந்தாற்போல் அதனை பராமரிக்க ஆட்கள் போதுமான  அளவில் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச் சாட்டு நிலவி  வருகிறது. எனவே, பழுதடைந்த பஸ்களை உடனடியாக சரிபார்க்க  முடியாமல், அவை பணிமனைகளில் முடங்கி கிடக்கிறது.

இதுகுறித்து சென்னை கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  கூறியதாவது: ஆரம்ப காலக்கட்டத்தில் ஓட்டுனர், நடத்துனர்,  அலுவலர், தொழில் நுட்ப பணியாளர் என 2 பஸ்களுக்கு 15 பேர்  வீதம் பணி புரிந்து வந்தனர். கடந்த 2003ம் ஆண்டில் தமிழக அரசு  ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அதனை தொடர்ந்து 2  பஸ்களுக்கு 13 பேர் என குறைக்கப்பட்டது. இதனால் 8  கோட்டங்களிலும் தொழில் நுட்ப பணியாளர்கள் பிரிவில் 5 ஆயிரமும்,  ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் என 5 ஆயிரமும் மொத்தம் 10  ஆயிரத்துக்கும் மேல் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக