சனி, 19 ஏப்ரல், 2014

‘குப்பை வண்டி விதி’


மரியாதைக்குரியவரே,வணக்கம்.

garbage truck
          வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி  என்னுடைய இடத்திற்கு போய்க் கொண்டிருந்தேன். நான் பயணித்துக் கொண்டிருந்தபோது கருப்பு நிற வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக நான் பயணித்த வாகனத்தின் குறுக்கே வந்தது. நான் பயணித்த வாகன ஓட்டுநர் மிகத் திறமையாக செயற்பட்டு ஒரு சில அங்குலங்களில் பேராபத்தை தவிர்த்துவிட்டார்.
பிழையாக குறுக்கே வந்த அந்த கருப்பு நிற வாகன ஓட்டுநர் எங்களை திட்டித் தீர்த்தார். நான் பயணித்த வாகன ஓட்டுநரோ அவரைப் பார்த்து புன்னகைத்து கையசைத்து விடை கொடுத்தார். 
        அவரின் அணுகுமுறையில் ஆச்சரியமடைந்த நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள்? நம் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பும் விதமாக அல்லவா அவர் வாகனம் ஓட்டினார்!’
‘குப்பை வண்டி விதி’  இதைத்தான் அந்த ஓட்டுநர் அன்று எனக்கு கற்றுத்தந்தார்.
அநேகமானோர் குப்பை வண்டிகள் மாதிரி. அவர்கள் மனச்சோர்வு, கோபம், விரக்தி போன்ற குப்பைகளால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். குப்பை குவியலாகியதும், அதை கொட்டிவிட அவர்களுக்கு ஓர் இடம் தேவை. 
         சிலவேளை அந்த இடம் நீங்களாகக்கூட இருக்கலாம். இதை தனிப்பட்ட ஒன்றாக எடுக்காதீர்கள். மாறாக புன்னகைத்து, வாழ்த்தி, விடை கொடுங்கள். அவர்கள் குப்பையை எடுத்து மற்றவர்கள் மீது அதாவது நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிலோ, தெருவிலோ கொட்டிவிடாதீர்கள்.
அடிப்படை என்னவென்றால் வெற்றியடைந்தவர்கள் குப்பை வண்டி போல் தங்கள் நாளை கெடுக்க விடமாட்டார்கள்.
10 வீதமான வாழ்வு நீங்கள் அதை எப்படி உருவாக்குகின்றீர்கள் என்பதிலும் 90 வீதமான வாழ்வு நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பதிலும்தான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக