சனி, 19 ஏப்ரல், 2014

மாண்புமிகு தேர்தல் ஆணையம் கவனத்திற்கு,,,,,,,,,,,

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். 
        மாண்புமிகு தேர்தல் ஆணையம் கவனத்திற்கு!, 
      
       வாக்குரிமை நீண்ட  தூர வழித்தட வாகன ஓட்டுநர்களுக்கு பொருந்தாத ஜனநாயக உரிமை? இந்தப் பதிவினை முழுமையாக படித்து அதன்படி சிந்திக்க வேண்டுகிறோம்!,தக்க ஆலோசனை வழங்க வேண்டுகிறோம்.
                           “சாரதிகள் இந்தியா” வலைப்பக்கத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம். 
 வாக்களிப்பது ஜனநாயக கடமையும் உரிமையும் ஆகும்.
                    இந்த  சொற்றொடர் அனைவருக்கும் பொருந்த வேண்டும்.குறிப்பாக லாரி,சுற்றுலா வாகனங்கள்,ஓட்டும் சாரதிகளுக்கு பொருந்தும் வகையில் தகுந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
               அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுப் போடும் வசதி உள்ளது போல வெளியூர்களுக்கு மற்றும் வெளி மாநிலங்களுக்கு  வாகனம் ஓட்டிச்செல்லும் சூழ்நிலையில் அந்த ஓட்டுநர்களும்,நடத்துநர்களும்,வாகன உதவியாளர்களும், ஓட்டுப்போட வசதியாக தபால் ஓட்டுப் போடும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனின்  ஜனநாயக உரிமையாம் வாக்குரிமையை அளிக்க நீண்ட தூர வழித்தடத்தில் பணிபுரியும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்,நடத்துநர்கள்,சரக்கு ஏற்றிச்செல்லும் ஓட்டுநர்கள்,வாகன உதவியாளர்கள்,ரெகுலர் சர்வீஸ், ஏற்றுமதிக்கான உற்பத்திப் பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகன ஒட்டுநர்கள் மற்றும் இவ்வாறான தனியார் சேவைப் பணியில் உள்ளவர்கள் சுற்றுலா வாகனம் உட்பட  போக்குவரத்துத் தொழிலாளிகள் அனைவரும் குறிப்பாக பொருள் போக்குவரத்துத் தொழிலாளிகள் அனைவரும் தம் சொந்த ஊரிலேயே இருக்க முடியாது..  அப்படியே இருந்தால் ஒருநாள் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்! நிறுத்தப்பட்டால்????? விளைவு என்ன ஆகும்? சிந்தியுங்கள்..சாரதிகளுக்கு வாக்களிக்க தக்க வழி காட்டுங்கள்....

 எங்களுக்கும் ஓட்டுப் போட ,,,
                           தபால் ஓட்டுப் போட தக்க வழி கூறுங்கள்.....
         சாலையே வாழ்க்கையாக அமைந்து இருக்கும் எங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த தக்க வாய்ப்பு ஏற்படுத்திக்  கொடுங்க
  அரசுப்பேருந்து ஓட்டுபவராக இருந்தாலும் சரிங்க! தனியார் பேருந்து ஓட்டுபவராக இருந்தாலும் சரிங்க!!  நீண்டதூர வழித்தட இயக்கப் பேருந்துவாக இருந்தாலும் சரிங்க!!  சுற்றுலா வாகன ஓட்டுபவராக இருந்தாலும் சரிங்க!!! சரக்கு வாகன ஓட்டுபவராக இருந்தாலும் சரிங்க!!!! போக்குவரத்துப் பணியில் இருப்போர் எத்தனை பேர்? கணக்கு எடுங்க!. எத்தனை வாக்குகள் வீணாகின்றன!?! சிந்தியுங்கள், தக்க வழி காட்டுங்கள்....


                              நன்றிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக