சனி, 19 ஏப்ரல், 2014

மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
        

 
                   செங்கல்பட்டு, செப். 23: மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை பல்வேறு பொழுது போக்கு சுற்றுலா மையங்கள் உள்ளன. சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரம் நகரம் இச்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாள் தோறும் புதுச்சேரிக்கும், மாமல்லபுரத்திற்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பஸ்கள், கார், வேன், ஆட்டோ வாகனங்கள் வந்துச் செல்கின்றன.
மேலும்  சென்னை-புதுச்சேரி, புதுச்சேரி-சென்னை, சென்னை-தென் மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலை வழியாகச் செல்கிறது.
இச்சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து நெம்மேலி வரை உள்ள கிராமங்களில் சிலர் மாடுகளை தங்கள் வீட்டில் கட்டி பராமரிக்க முடியாமல் அவிழ்த்து விடுவதால் அவை சாலைகளில் சுற்றித் திரிகின்றன.
அவ்வாறு சுற்றித் திரியும் மாடுகள் கிழக்குக் கடற்கரைச் சாலையின் நடுவில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்றன. அதி வேகமாக வாகனங்கள் வரும் போது குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாடுகளால், வாகனங்கள் நிலை தடுமாறி விபத்து நேரிடுவதாக வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 சமீப காலமாக இ.சி.ஆர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்து உயிரிழப்பு ஏற்படும் சம்பவமும் அதிகரித்துள்ளது. எனவே சாலையில் மாடுகளைத் திரிய விடும் நபர்கள் மீது போலீஸôர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக