சனி, 19 ஏப்ரல், 2014

நடத்துனரை, கத்தி, அரிவாளால், சரமாரியாக வெட்டிய,

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.


 

பதிவு செய்த நாள்

17 பிப்
2014
23:33
 சென்னை: பேருந்தில், தாளம் போட்டு, பாட்டு பாடியதை கண்டித்த நடத்துனரை, கத்தி, அரிவாளால், சரமாரியாக வெட்டிய, புதுக் கல்லூரி மாணவர்களின் செயலால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணா சதுக்கம் பூந்தமல்லி செல்லும், தடம் எண் "25ஜி' பேருந்து, நேற்று பிற்பகல், 2:30 மணிக்கு, ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையில் வந்த போது, புதுக் கல்லூரி மாணவர்கள், 10க்கும் மேற்பட்டோர், தாளம் போட்டு, பாட்டு பாடி, ஆபாச வார்த்தைகளால் பேசினர். இதை, நடத்துனர் பாண்டியன் கண்டித்தார். ஆனால், மாணவர்கள், நடத்துனரின் கண்டிப்பை அலட்சியப்படுத்தி, மீண்டும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஒரு மணவர், அலைபேசியில் யாரையோ தொடர்பு கொண்டு, "பேருந்து நடத்துனர், எங்களை தரக்குறைவாக திட்டுகிறார்' என கூறிவிட்டு, நடத்துனரை சரமாரியாக தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர், பேருந்தை சாலையிலேயே நிறுத்தினார். அதற்குள், இரண்டு இருசக்கர வாகனங்களில், கத்தி, அரிவாள்களுடன் வந்த சிலர், நடத்துனரை இறக்கி, சரமாரியாக வெட்டி, தப்பினர். ஆபத்தான நிலையில் இருந்த பாண்டியனை, ஓட்டுனர் மற்றும் பயணிகள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த, 10க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், பேருந்துகளை நிறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனாம்பேட்டை உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, "நடத்துனரை தாக்கியவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர்' எனக் கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதை, சம்பவத்தை நேரில் பார்த்த கல்லூரி மாணவர் ஒருவர், "இந்த தாக்குதலில் ஈடுட்டது நியூ கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்கள் தான்' என, போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பீட்டர் சாலை வழியாகவா...ஆளை விடுங்கப்பா...! : போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாணவர்களின் அராஜகத்தால், பீட்டர் சாலை வழியாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள், "நாங்கள் போக மாட்டோம்' என கூறி விடுகின்றனர். கடந்த காலங்களில் எவ்வளவோ சம்பவங்கள் நடந்த போதிலும், போலீசார், கண் துடைப்புக்கு, சிலர் மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கின்றனர். மாணவர்கள் அட்டகாசத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர, கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக