மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
ஊட்டியில்
இருந்து ஈரோடு வரும் பேருந்து ஒன்று சுமார் 40 பயணிகளுடன் தமது பயணத்தை
தொடங்கியது. பரளியாறு பகுதியில் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. வலப்புறம் திரும்பினால் 1000 அடி பள்ளம்.
அந்த உயிர் போகும் நிலையில் பேருந்து ஓட்டுநர் பேருந்தை இடப்பக்கமாக
திருப்பி நாற்பது பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.
பேருந்தை
இடப்புறம் திருப்பும் போது பேருந்து நிலைகுலைந்து பக்கவாட்டில் சாய்ந்தது,
இதில் ஓட்டுநர் தலை பேருந்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார், ஒருவேளை பேருந்து பக்கவாட்டில் சாயாமல் இருந்திருந்தால் தேவையான முதலுதவி சிகிச்சைகள் செய்து ஓட்டுநரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்,
ஆனாலும் அந்த சூழலில் ஓட்டுநர் பேருந்தை இடப்புறம் திருப்ப வேண்டியது
கட்டாயமும் கூட, உள்ளிருந்த பயணிகளின் உயிரை காப்பாற்றவே ஓட்டுநர் பேருந்தை
இடப்பக்கம் திருப்பினார்.
பேருந்தில்
பயணம் செய்த பயணிகளில் பத்து பேருக்கு மட்டும் சிறுகாயங்கள் ஏற்பட்டது,
பின்பு மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு பேருந்து தூக்கி
நிறுத்தப்பட்டது , இந்த நிகழ்ச்சி அப்பேருந்தில் பயணம் செய்த ஒவ்வொருவரும்
தங்கள் வாழ்வில் மறக்க முடியாதது என்றும், தங்கள் உயிரை காப்பாற்ற தனது
உயிரை தியாகம் செய்த ஓட்டுநரை எங்கள் வாழ்வாளில் உயிருள்ளவரை மறக்க
மாட்டோம் என்றும் பயணிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக