மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அரசாங்க பேருந்தில் சீட் பெல்ட் இல்லையா? – கோர்டில் மனு
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12, 2014
உங்கள் கருத்தை பதிவு செய்ய
நமது வாழ்கையின் ஓட்டத்திற்கு நம்முடன்
வருவது பேருந்துகள். அதிலும் அரசாங்க பேருந்துகள் முக்கிய இடத்தில் நமது
வாழ்க்கையுடன் ஒன்றுபட்டுள்ளன.
தனியார் பேருந்துகள் என்றால் அதிக வேகம் மட்டுமே. பாதுகாப்பு என்பது அரசாங்க பேருந்தில் தான் என்பது அனைவரின் மனதிலும் ஒத்துகொண்ட விஷயம். அவ்வாறு இருக்க தமிழகத்தில் போக்குவரத்து கழகங்கள் நஷ்ட்டத்தில்தான் செயல்படுகின்றன. என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
காலை முதல் மாலை வரை அமர கூட இடமில்லாமல் பயணம் செய்வது என்னவோ அரசு பேருந்தில்தான். வாகன் ஓட்டிகளுக்கு கடுமையான விதிகளை விதித்த அரசாங்கம் அரசு பேருந்தை இயக்கம் ஓட்டுனர்களை விட்டு விட்டது.
சீட் பெல்ட் என்பது உயிர் காக்கும் கவசம் போன்ற ஒன்று சிறிய ரக வாகனங்களில் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிய வில்லை என்றால் போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ 500 முதல் அதிகபட்சம் ரூ 2000 வரை அபராதம் விதிக்கிறார்கள்.
இதனால் கார் போன்ற சிறிய ரக வாகன ஓட்டிகள் சீட் பெல்டை அணிந்துகொள்கின்றனர். ஆனால் அரசாங்க பேருந்து ஓட்டிகளுக்கு இதுவரை போக்குவரத்து துறையோ அல்லது அரசாங்கமோ சீட் பெல்ட் அணிய சொல்லவில்லை. இதை வலியுருத்தவும் இல்லை.
உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பிரகாஷ் ராஜ் பொது மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:-
மோட்டார் வாகன சட்டத்தின்படி கார் மற்றும் பஸ்களை ஓட்டும் ஓட்டுனர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். அவ்வாறு அணியாத கார் ஓட்டுனர்களுக்கு சென்னை மாநகர போலீஸார் அபராதம் விதித்து வருகிறார்கள்.ஆனால் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ‘சீட் பெல்ட்’ வசதி இல்லாமல் உள்ளது. இந்த பேருந்துகள் விபத்தில் சிக்கும்போது ஓட்டுனர்கள் உயிரிழக்கின்றனர். இந்த மாதிரி விபத்துக்களை அரசாங்கம் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். எனவே மோட்டார் வாகன சட்டத்தின்படி தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளிலும் சீட் பெல்ட் மற்றும் தீயணைப்பு கருவி பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
நேற்று இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி ரவிச்சந்திரபாபு ஆகியோர் இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அரசாங்க பேருந்துகளில் அனைத்து பேருந்திலும் சீட் பெல்ட் என்பது உண்டது சரியானா பராமரிப்பு இல்லாமல் அணியும் திறனை பெல்ட்கள் இழந்துவிட்டன என்பதே உண்மை.
நண்பரின் மனு சரியே ஆனால் சொல்ல வந்த கருத்துதான் சிறிது மார்விட்டது. எனினும் இதைபற்றி விசாரித்து நீதிமன்றம் மனுவை ஏற்று இருக்கலாம் அல்லது போக்குவரத்து துறையிடம் ஆலோசனை செய்திருக்கலாம். அல்லது குரந்தபட்சம் அரசாங்க பேருந்திலாவது சென்றிருக்கலாம்.
அரசாங்க பேருந்து நிற்காமல் ஓடினாலே போதும். அரசாங்க பேருந்தில் பயணிப்போருக்கு உத்திரவாதம் ஓட்டுனர். ஓட்டுனருக்கு உத்திரவாதம் உயிர் காக்கும் கவசங்களில் ஒன்றான சீட் பெல்ட் என்பதை அறிந்து. அரசாங்க ஓட்டுனர்களே சீட் பெல்டின் பழுதை நீக்கி அல்லது புதுப்பித்து மாட்டுவதுதான் தீர்வு என்பதே நமது கருத்து – தமிழன் குரல் நிருபர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக